விக்கிநூல்கள்:2012 தமிழ் விக்கிநூல்கள் ஆண்டு அறிக்கை/2012 Tamil Wikibooks Annual Review

2012 ம் ஆண்டு தமிழ் விக்கிநூல்களுக்கு ஒர் அடுத்தளமான ஆண்டு ஆகும். தமிழ் விக்கிநூல்களின் மொத்த பக்கங்கள் எண்ணிக்கை 800த் தாண்டியது.[1] ஆனால் இந்தப் பக்கங்களில் ஒரு குறிப்பிடத்தக்க விழுக்காடு விக்கிமேற்கோள்களுக்கு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள் ஆகும். பக்கங்கள் அடிப்படையில் தமிழ் விக்கிநூல்கள் உலக அளவில் 28 ஆவது இடத்தில் இருக்கின்றது.[2] உலக அளவில் முன்னிற்கு தமிழ் விக்கியூடகத் திட்டங்களில் ஒன்றாக தமிழ் விக்கிநூல்கள் திகழ்கின்றன. இந்த ஆண்டு பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை 2000த் தாண்டியது. இதில் 15 பேர் செயற்படு பயனர்கள். எனினும் தமிழ் விக்கிநூல்களில் தொடர்ச்சியாக பங்களித்து ஊடாடக்கூடிய ஒரு விக்கிக் குமுகம் இன்னும் வளரவில்லை. 2012 இல் புதிதாக ஒரு நிர்வாகி தேர்தெடுக்கப்பட்டார்.

தமிழ் விக்கிநூல் சராசரியாக நாளுக்கு 2400 அல்லது மாதாந்தம் 74,217 தடவைகள் பார்க்கப்படுகின்றது.[3] இது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடே. தமிழ் விக்கிநூல்கள் பரந்த அறிமுகம் பெறும் போதும், உள்ளடக்கம் விரிவாகும் போது இந்தப் பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பாக்கலாம்.

2012 இல் தொடங்கப்பட்ட நூல்களில் பின்வருவன குறிப்பிடத்தக்கன:

2012 இல் பல்வேறு துப்பரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முதற்பக்கம், சமூக வலைவாசல் ஆகியன மீள் வடிவமைக்கப்பட்டன. கொள்கைப் பக்கங்கள் திருத்தி எழுதப்பட்டன. பல்வேறு பக்கங்கள் விக்கிநூல்களுக்கு மாற்றப்பட்டன. எனினும் கணிசமான தொடக்கநிலை துப்பரவுப் பணிகள் தொடர்ந்து உள்ளன. மேலும் உள்ள விக்கிமேற்கோள் பக்கங்கள் அங்கு மாற்றப்படவேண்டும். வகைப்படுத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் பணிகள் செய்யப்பட வேண்டும். சில நூல்கள் விக்கிநூலாக்கம் செய்யப்பட வேண்டும்.

தமிழ் விக்கிநூல்கள் வளர அது பற்றிய அறிமுகம், அதன் தனித்தன்மை பயன்பாடு பற்றிய விளக்கம் விரிவாக பரப்புரை செய்யப்பட வேண்டும். குறிப்பாக தமிழ் விக்கி நிகழ்வுகளில் விக்கிநூல்கள் பற்றிய கூடிய விரிவான அறிமுகம் இடம்பெற வேண்டும். மாணவர்கள், தொழில்வல்லுனர்கள், குழந்தைகள், பொது வாசகர்கள் எனக் கவனப்படுத்தப்பட்டு உள்ளடக்கம் விரிவாக்கப்பட வேண்டும். அதிகம் தேடப்படும் விரும்பப்படும் தலைப்புகளிலும் நூல்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அனைத்து தமிழ் விக்கியூடகத் திட்டங்கள் போன்று தமிழ் விக்கிநூற்களுக்கு நடுநிலைமை, இணக்க முடிவு, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் முதலியவை முக்கியம். எளிய தமிழில் கட்டற்ற விக்கிநூற்களை உருவாக்குதல் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது. உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் பேசுபவர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-சாதி-வர்க்க சார்பற்ற இந்த தமிழ் கூட்டுழைப்புத் திட்டத்திற்கு பங்களிக்க முன்வரவேண்டும்.

இந்த 2012 தமிழ் விக்கிநூல் ஆண்டு அறிக்கையின் நோக்கம் 2012 ஆண்டு செயற்பாடுகளை விவரித்து, 2013 ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிநூல்களின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. யாரும் எப்பொழுதும் விக்கிநூல் ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும்.

மேற்கோள்கள் தொகு

  1. Wikibook Statistics Tamil
  2. Wikibooks
  3. Wikibook Statistics - Monday December 31, 2012
குறுக்கு வழி:
WB:2012taWikiBooksReport