பேச்சு:பாடம்:எப்படிச் செய்வது

எப்படிச் செய்வது என்பது ஒரு நூலே. இவற்றின் சில பகுதிகள் தனியாக நூலாக ஆக்கப்படக் கூடியவை. ஆனால் தற்போது அவற்றை ஒரு நூலில் பக்கங்களாகவே பார்க்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 02:25, 7 ஜூலை 2012 (UTC)

எப்படிச் செய்வது நூலின் பெயரில் சிறிது மாற்றம் செய்தால் இப்பிரச்சனை முடிந்துவிடும். --இராஜ்குமார் (பேச்சு) 09:57, 7 ஜூலை 2012 (UTC)
நீங்கள் கூறுவது சற்று விளங்கவில்லை. எப்படிச் செய்வதில் இருந்து சில தலைப்புக்களைப் பிரித்து தனி நூற்கள் ஆக்க முடியும். எ.கா வீட்டுத் தோட்டம்.. ஆனால் தற்போது இவை ஒரு நூலின் தனிப் பக்கங்களே. --Natkeeran (பேச்சு) 14:42, 7 ஜூலை 2012 (UTC)
தங்களுக்கு எப்படிச் செய்வது என்றப் பக்கத்தை நூலாக்க வேண்டுமென்றால் அதன் தலைப்பை "எப்படிச் செய்வது - ஒரு சிறியக் கையேடு" என்பது போல் அதனை மாற்றலாம். அப்படியில்லையென்றால் எப்படிச் செய்வது என்பதின் துணைப்பக்கங்களின் தலைப்பை மாற்றவேண்டும்; அதேபோல் எப்படிச் செய்வது என்றப்பக்கத்தை நீக்க வேண்டும். தங்களுக்கு நூலாக வேண்டுமா? பாடமாக வேண்டுமா ? என்பதை தெரிவிக்கவும். பிறகு இதனை சரி செய்யலாம். --இராஜ்குமார் (பேச்சு) 06:01, 8 ஜூலை 2012 (UTC)


உங்கள் கூற்று முழுதாக விளங்கவில்லை. எப்படிச் செய்வது என்பது ஒரு நூல். அதன் பக்கங்களே வீட்டுத் தோட்டம், வரவுசெலவு போன்ற கட்டுரைகள் போன்றவை. இவற்றில் சில பின்னர் தனி நூற்களாக வளர்த்தெடுக்கத் தக்கவை. தறசமயம் தெரியப்படாத நிலையில் உள்ள நூல்கள் என்ற பகுப்பின் கீழ் உள்ள பட்டியல் பொருந்தவில்லை என்றே கூற வருகிறேன். --Natkeeran
சரி. "எப்படிச் செய்வது"ஐ தற்போது நூலாகவே வைத்துவிட்டேன். ஆகையால், அதன் துணைப்பக்கங்கள் இப்பாடப்பகுதியில் காட்டப்படாது காட்டப்படமாட்டாது. பிறகு தனி நூல்களாக மாற்றி அமைத்தவுடன் இங்கு காட்டப்படும். நன்றி.--இராஜ்குமார் (பேச்சு) 19:24, 8 ஜூலை 2012 (UTC)


இப்பொழுது நீங்கள் செய்ய முயன்றது புரிகிறது. எப்படிச் செய்வது என்பதை ஒரு பாடமாக அமைத்து அதில் பல வகை நூல்கள் அடங்குவது என்பது. சரியே. எப்படிச் செய்யும் பக்கங்களை எப்படிச் செய்வது என்ற பொதுப் பகுப்புக்குள்ளே இடுவது பொருத்தம் என்றே நினைக்கிறேன். சீர்மையைச் சற்றுக் குலைக்கும் என்பது உண்மைதான். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:30, 8 ஜூலை 2012 (UTC)
Return to "பாடம்:எப்படிச் செய்வது" page.