Sancheevis! விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது!
வாருங்கள், Sancheevis!
வாருங்கள் Sancheevis, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
விக்கிநூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிநூல் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிநூல் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஆலமரத்தடியில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள், அல்லது உங்களுக்கான மணல்தொட்டியை உருவாக்குங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

புது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி.

--இராஜ்குமார் 00:15, 16 செப்டெம்பர் 2011 (UTC)Reply

தங்களை விக்கி நூல்களுக்கு அழைக்கிறோம்

தொகு
 
தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம் தங்களின் உதவியை நாடுகிறது

தமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது. இதுவரை எந்த ஒரு உருப்படியான தமிழ் நூல்கள் (விக்கி மூலத்தில் உள்ள நூல்களைத் தவிர்த்து) எதுவும் இயற்றப்படவில்லை. எனவே தங்களின் உதவி விக்கி நூல்களுக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சுமார் 500 பக்கங்களிலே அங்கு நாம் கொண்டு உள்ளோம். எனவே நமது கவனம் விக்கி நூல்களின் பக்கமும் செலுத்தவேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். எனவே தங்களிடம் சில வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். அவையாவன:

  1. தாங்கள் விரும்பும் நூல்கள் (விக்கி மூலத்தின் அடுக்கில் கீழ் செல்ல முடியாத நூல்கள், முக்கியமாக பொது காப்புரிமையாக்கப்பட்ட நூல்களை) தமிழ் விக்கி நூல்களில் இருக்கின்றனவா என தேடித் பாருங்கள்.
  2. ஒரு வேளை அங்கு இல்லை என்றால் அந்த புத்தகத்தை ஆரம்பித்து வையுங்கள். முதற் பக்கத்தில் தாங்கள் எந்த எந்தத் தலைப்புகளெல்லாம் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றைக் கொண்ட அந்த நூலின் முதற் பக்கத்தை ஆரம்பித்து வையுங்கள்.
  3. அல்லது தற்போது தொகுப்பில் உள்ள நூல்களுக்கு உங்களால் பங்களிக்க முடியும் எனில் தொகுப்பில் உள்ள நூல்களின் பட்டியல் இங்கு உள்ளது.

நமக்காகக் காத்திருக்கும் பணிகள்

தொகு

விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினருக்கு

தொகு

விவசாயம் மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்தி குறித்த கருத்துக்களை இங்கு பதியலாம். உதாரணமாக செம்மை நெல் சாகுபடி. ஒரு சிறு நூலை இங்கு உருவாக்குவதன் மூலம் விவசாயத்திற்கு உதவ முடியும் என நம்புகிறோம். மேலும் w:தமிழக சமுதாய வானொலிகளையும் இங்கு அழைக்கிறோம். விவசாயம் சார்ந்த நுணுக்கங்களை முதன்மை வானொலி நிலையங்கள் கொடுத்து வருகின்றன, அவற்றை தொகுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம். துறை சார்ந்த நூல்கள் பட்டியல் இங்கு உள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு

தொகு

உங்களால் முடியும் எனில் பாடநூல்களை இங்கு வெளியிட உதவுங்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் உள்ள பாடங்களைத் தொகுத்து வெளியிட கேட்டுக் கொள்கிறேன். மேலும் நமது தமிழ் சமுதாயம் உலகம் முழுமையும் தாங்கள் தமிழில் பயிலும் பாடநூல்களை இங்கு வெளியிட உதவலாமே.

பல்கலைக் கழகங்களுக்கு

தொகு

ஒரு வேளை தாங்கள் பல்கலை ஆசிரியராக இருக்கலாம், நீங்கள் ஏதாவது ஒரு நூலை தமிழில் இயற்றுவதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என நம்புகிறோம். அப்படி முழு நூலை உருவாக்க முடியவில்லை என்றால் அந்த நூலின் ஆரம்ப பொருளடக்கப் பகுதியை ஆரம்பித்து வைப்பதன் மூலம் ஒரு புதிய நூல உருவாக தாங்கள் காரணமாக அமைய முடியும் என நம்புகிறோம்.

ஆய்வேடுகள் தொகுப்பில் இதுவரை தமிழில் உருவாக்கப்பட்டு உள்ள மாணவர்கள், பேராசியர்களின் தொழில்நுட்பபுல (phd) சுருக்கம் உருவாக்கும் நோக்கம் உள்ளது. இதில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.

பொறியாளர்களுக்கு

தொகு

தமிழ் மொழியை சங்ககாலம் முதலே ஒரு இலக்கியத் தமிழாகவும், இயற் தமிழாகவும், இசைத் தமிழாகவும் பல அறிஞர், அரசர்களால், துறவியர்களால் உருவாக்கப்பட்டுவிட்டுள்ளது. ஆனால் தமிழை அறிவியல்த் தமிழாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் பொறியாளர்களுக்கு உண்டு என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எனவே அறிவியல் தமிழை உருவாக்க பொறியாளர்களை அழைக்கிறோம். பொறியியல் சார் நூல்களைத் தொகுக்க அழைக்கிறோம். மேலும் சில தருணங்களில் அறிவியல் சொற்களை உருவாக்கும் பொழுது பின்பற்றப் பட வேண்டிய முறைகளைப் பற்றியப் பக்கத்தைக் காணவும்.


தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம்.

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sancheevis&oldid=16050" இலிருந்து மீள்விக்கப்பட்டது