அறிவியல் சொற்கள் உருவாக்கச் செயல்முறை
விதி ௧: சொல்லில் இயற்த்தன்மை மிகும்
தொகுசொற்களை மொழிபெயர்க்க அதிக சிரத்தைக் கொடுக்காமல் சொற்களை மொழிமாற்றம் செய்யவே முயல வேண்டும்.
உ.தா: three-phase current என்னும் சொல்லை மொழி பெயர்த்தால் மும்முனை மின்சாரம் என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் phase என்னும் சொல்லை முனை என்று மொழிபெயர்த்து உபயோகம் செய்யப்படுகிறது. அதற்குப் பதிலாக three-phase current இயற்குணத்தை மொழிபெயர்க்கும் சொல்லை அறிவியல் சொல்லில் புகுத்த வேண்டும். three-phase என்றால் மூன்று நிலைகளில் உள்ள அலைப் பண்பை குறிக்க வேண்டும், அதாவது ஒரு கம்பியில் 0'டிகிரியில் மின்சார அலை ஆரம்பித்தால், இரண்டாவதில் 120'டிகிரியாகவும், மூன்றாவது கம்பியில் 240'டிகிரியாகவும் இருக்கும்; இந்த இயற்பியல் தன்மையைக் கொண்டு ஒரு சொல்ல உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். முந்நிலைமின்னோட்டம் என்னும் சொல்லே சிறந்தது.
விதி ௨: பிரிப்பை விட சொற் சேர்த்தல் நன்று
தொகுசொற்களை பிரித்து பிரித்து அறிவியல் சொல் உருவாக்குவதை விட சேர்ப்பே சிறந்தது. உதாரணமாக webservice என்னும் சொல்ல இணைய சேவை என்று சொல் உருவாக்குவதை விட இணையச்சேவை என்று எழுதுவது நலம்.
விதி ௩: முழுப் பொருளுடை சொற்க்குறைப்பு அவசியம்
தொகுசொற்களை எந்த அளவிற்கு சுருங்கிய வடிவில் முழுப் பொருளையும் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்குக் கொடுக்க வேண்டும்.
உ.தா: protocol என்பதை நெறிமுறை என்று சொல்படுத்துவதை விட நெறி என்றாலே நாம் எதிர்பார்க்கும் சொல்லாக்கத்தை அடைய முடியும்.. இதைப் போன்றே File Transfer Protocol என்பதை கோப்பு பரிமாற்ற நெறிமுறை என்பதை விட கோப்புப்பரிமாற்றனெறி என்றே கூறலாம்.
விதி ௪: சந்தி வரின் இடைவெளி நீங்கும்
தொகுஅறிவியல் சொல்லில் இரண்டு வேறுபட்டச் சொற்களுக்கு இடையே சந்தி கொண்டு வந்தால் சொற்களைச் சேர்த்து விட்டு, இடைவெளியை நீக்கி விட வேண்டும்.
உதா. இணையச் சேவை என்று கூறுவதை விட இணையச்சேவை எனச் சேர்க்கப் பட வேண்டும்.