விக்கிநூல்கள்:மணல்தொட்டி

இந்த மணல்தொட்டியைப் (Sand box) பயன்படுத்துவதற்கு இந்தப் பக்கத்தின் மேல் காணும் தொகு இணைப்பைச் சொடுக்கவும். குறிக்கப்பட்டுள்ள இடத்துக்குக் கீழே நீங்கள் விரும்பியவாறு தொகுத்தல் பயிற்சி செய்யலாம். உங்கள் தொகுப்பின் விளைவுத் தோற்றத்தை அறிய கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பக்கத்தை சேமிக்கவும் பொத்தானைச் சொடுக்கவும்.

இந்த மணல்தொட்டி தொகுத்தல் பரிசோதனைக்கானது. இதில் நீங்கள் செய்யும் திருத்த வேலைகளுக்காக மற்றவர்களிடம் குறை கேட்கவேண்டியதில்லை. எனவே சுதந்திரமாக நீங்கள் பயிற்சி செய்யலாம். இந்தப் பக்கத்தில் நீங்கள் செய்யும் தொகுப்புக்கள் நிரந்தரமானவையல்ல என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.

தமிழ் தட்டச்சு உதவி

  • இகலப்பை - http://www.tamil.net/newtamil/ekalappai_1.html எனற மென்பொருளைப் பயன்படுத்தி எளிதாக தமிழில் நீங்கள் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளில் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும்.
  • அல்லது முரசு அஞ்சல் போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை http://www.murasu.com/downloads/ என்ற பக்கத்திலிருந்து உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
  • மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள சுரதா எழுதிகளை பயன்படுத்தலாம்.http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm



== தொகுத்தல் பயிற்சி செய்யுமிடம் ==veeranam lake one of bigest in tamilnadu it located in cuddalore district near kattumannarkoil.It is 24km long and 9km agalam cauvery water end to veranam lake through koollidam and vadavaru.Many crops were irricated from veeranam water.

உங்கள் தொகுத்தல் பயிற்சியினை ஆரம்பிக்கலாம், மணல்தொட்டி இங்கு தொகுக்க! அல்லது உங்களுக்கென தனித்துவமான மணல்தொட்டியை உருவாக்குங்கள்.



பயிற்சி:1

சாயிஎன்றொரு அருளாளர்

சாயிபாபா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சததியநாராயணா ஆந்திரமாநிலத்தில் புட்டபர்த்தி எனும் சிறுகிராமத்தில் பிறந்தார்.அவர் பிறந்தபோது இயற்கைக்குமாறான சில நிகழ்வுகள் நடந்தன. வீட்டிலிருந்த மங்கள வாத்தியங்கள் தாமாக ஒலித்தன. அவை பிறக்கப்போகும் குழந்தை ஒருமகான் என்று உலகுக்கு அறிவிப்பதுபோல் இருந்தன.

பாபா அவர்களின் தந்தை பெத்தவெங்கப்பராசு <sl>('பெத்த' என்றதெலுங்குச்சொல்லுக்கப் 'பெரிய' என்று பொருள்)</sl>. தாய் ஈசுவராம்பாள் ஆவார். பலநாட்கள் தவமிருந்து பெற்றபி்ள்ளை. சத்தியநாராயண விரதம் இருந்து பெற்றமையால் சத்தியநாராயணன் என்று பெயர்சூட்டினார்கள்.

ஆய்வேடுகள் அறிமுகம் அரசு கலைக்கல்லூரி, சேலம் -7 ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு(எம்.ஃபில்.,) அளிக்கப்படும் ஆய்வேடு

ஆய்வாளர்சே.கனகா.நெறியாளர் முனைவர். ஜ. பிரேமலதா, தமிழ் இணைப் பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் - 636 007 ஐங்குறுநூற்றில் திணைக்கோட்பாடுகள் முன்னுரை இயல் 1 அகத்திணைக் கோட்பாடுகள் இயல் 2 ஐங்குறுநூற்றின் சிறப்பு இயல் 3 மருதம், நெய்தல் இயல் 4 குறிஞ்சி, பாலை, முல்லை இயல் 5 திணை மயக்கம் முடிவுரை துணை நூற்பட்டியல் முன்னுரை


‘‘வானம் அளந்தனைத்து அறிந்திடும் வாண்மொழ’‘ என்று பாரதியாரால் போற்றப்பட்ட தமிழ்மொழி, மனிதன் முதன் முதலில் பேசிய பழம்பெரும் மொழிகளில் ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்கத் தமிழ் மொழியில் பல இலக்கியங்கள் தோன்றி வளர்ச்சி பொற்றிருந்தாலும் பண்டைக்காலம் முதல் இக்காலம் வரை தனக்கென ஒரு தனியிடத்தை வகிப்பது சங்க இலக்கியம் ஆகும். சங்க இலக்கியம் ‘பாட்டு தொகையும்’ என்று கூறப்படும். பாட்டு என்பது பத்துபாட்டு; தொகை என்பது எட்டுத்தொகை பாட்டும் தொகையும் இணைந்தே சங்க இலக்கியம் எனப்படுகிறது.


சங்க காலம் முதல் இக்காலம் வரை சங்க இலக்கியத்தை எடுத்தாளாத படைப்பாளர்களே இல்லை என்று கூறலாம், அடறத அளவிற்கு மக்களின் அக, புற வாழ்க்கையைக் பற்றி எடுத்துரைக்கும் காலக் கண்ணாடியாக விளங்கும் சிறப்புச் சங்க இலக்கியத்திற்கே உண்டு, சிதறிக் கிடந்த வங்கத் தனிப்பாடல்கள் எல்லாம் எட்டுத்தொகையும் நூல்கள் பெரும்பாலும் அகத்தைப் பற்றிக் கூறுவதாக உள்ளன.


சங்க இலக்கிய அகப்பாடல்கள் அவர்களின் அகவாழ்க்கை நிலையையும், ஆண் பெண் உறவுபளையும், காதல் தொடர்பான நுண்ணிய மன உணர்வுகளையும் வெளிப்படுத்துவதோடு அன்றாட நிகழ்வுகளையும் படம் பிடித்துக்காட்டுகின்றன.

அக இலக்கியத்தில் ஒன்றான ஐங்குறுநூறானது மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற நில வைப்புமுறை அடிப்படையில் திகழ்கிறது. இந்நூலில் தலைவன் தலைவியின் வாழ்வியலில் நிகழ்ந்த அறத்தொடு நிற்றல், நொதுமலர் வரைவு, பரத்தமை, வாயில் நேர்தல், வாயில் மறுத்தல், தலைவன் இரங்குதல், தலைவி இரங்குதல், வரைவு நீட்டித்தல் இவற்றைப் பற்றி ஆராய்வதே இவ்வாய்வின்நோக்கமாகும்.

ஆய்வுத்தலைப்பு

‘‘ஐங்குறுநூற்றில் திணைக்கோட்பாடுகள்’‘ என்ற பொருண்மையில் ஆய்வுத் தலைப்பு அமைந்துள்ளது.

ஆய்வுநோக்கம்


சங்க இலக்கியச் சிறப்பினையும், ஐந்திணைகளாகிய மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை ஆகியவற்றினைப் பற்றி நூறு நூறு பாடல்களில் விரிவாகப் பார்ப்பதே இவ்வாய்வின் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆய்வுமுன்னோடிகள்

சங்க இலக்கியத்தில் பலரும், பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தறிந்த ஆய்வுரைகள், ஆய்வேடுகள் பலவாகும் அவ்வாய்வுகளை முன்னோடியாகக் கொண்டு ‘‘ஐங்குறுநூற்றில் திணைக்கோட்பாடுகள்’‘ எனும் இவ்வாய்வு அமைகிறது.

ஆய்வுச்சான்றாதாரங்கள்

ஆய்வுச் சான்றாதாரங்கள் இரண்டு வகைப்படும். 1) முதன்மை ஆதாரங்கள் 2) துணைமை ஆதாரங்கள்

முதன்மை ஆதாரங்கள்

சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுல் ஐங்குறுநூறு இவ்வாய்வுக்கு முதன்மைசான்றாதாரமாகஉள்ளது.

துணைஆதாரங்கள்

சங்க இலக்கியங்கள் குறித்து வெளிவந்துள்ள நூல்களும், அறிஞர்கள் நூல்களில் இருக்கும் கருத்துக்களும், இலக்கண இலக்கியங்களும், ஆய்வேடுகளும் துணைமை ஆதாரங்களாகக் கொள்ளப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வுநடை

ஆய்வேடு அனைவரும் படித்து இன்புறும் வண்ணம் எளிய தமிழ் நடையில் எடுத்தாளப்பட்டுள்ளது. மேற்கோள்கள், பாடல் வரிகள் ஆகியவை உரைநூலில் உள்ளவாறேஎடுத்தாளப்பட்டுள்ளன.

ஆய்வுஅணுகுமுறை

ஐங்குறுநூற்றில் உள்ள ஐந்திணை பாடல்களில் நிகழும் வாழ்வியல் நிகழ்வுகளைப் பகுத்து கூறுவதால் பகுப்பாய்வு முறையாகவும், ஐங்குறுநூற்றை விளக்கிக் கூறுவதால் விளக்கமுறை ஆய்வாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுப்பகுப்பு

இவ்வாய்வு முன்னுரை, முடிவுரை நீங்கலாக நான்கு இயல்களைக் கொண்டு அமைந்துள்ளது. இயல் 1 அகத்திணைக் கோட்பாடுகள் இயல் 2 ஐங்குறுநூற்றின் சிறப்பு இயல் 3 மருதம், நெய்தல் இயல் 4 குறிஞ்சி, பாலை, முல்லை இயல் 5 திணை மயக்கம்

முதல் இயலான ‘‘அகத்திணைக் கோட்பாடுகள்’‘ எனும் இயலில் சங்க இலக்கியத்தில் அகம், திணை, திணைக்கோட்பாடு, அகத்திணைக் கோட்பாடு, அகநூல்களில் திணை வைப்புமுறை பற்றியும் பகுத்தாராயப்பட்டுள்ளது.

இரண்டாம் இயலான ‘‘ஐங்குறுநூற்றின் சிறப்பு’‘ எனும் இயலில் இலக்கியம் பற்றியதும், ஐங்குறுநூற்றினைப் பாடிய புலவர்களைப் பற்றியும் பாடல்களின் சிறப்பினையும், அரசர்கள், ஊர்கள், உள்ளுறை, இறைச்சி போன்றவற்றைப் பற்றியும்தொகுத்தாராயப்பட்டுள்ளது.


மூன்றாம் இயலான ‘‘மருதம், நெய்தல்’‘ என்ற இயலில் மருதம், நெய்தல் திணையின் முப்பொருளையும், தலைவன் தலைவியின் வாழ்க்கையில் நிகழும் வாயில் நேர்தல், வாயில் மறுத்தல், பரத்தமை போன்றவற்றைப் பற்றி ஆராயப்பட்டுள்ளது.

நான்காம் இயலான ‘‘குறிஞ்சி, பாலை, முல்லை’‘ என்ற இயலில் இம்மூன்று திணைகளின் முப்பொருளையும், தலைவன், தலைவியின் களவு வாழ்க்கையில் தோழி, பறத்தொடு நிற்றல், நொதுமலர் வரைவு, இற்செறிப்பு, குறிகள், தலைவியின் ஆற்றாமை, உடன்போக்கு, பொருள் வயிற் பிரிவு, செலவு அழுங்குதல், தலைவன் தேர்ப்பாகனுக்கு உரைத்தல் ஆகியவற்றைப் பற்றி இவ்வியலில் தொகுத்தாராயப்பட்டுள்ளது.

ஐந்தாம் இயலான ‘‘திணை மயக்கம்’‘ என்ற இயலில் தொல்காப்பியரின் கருத்துப்படி திணை மயக்கம் என்பது உரிப்பொருள் மயங்காது என்றும் இதனை மற்ற அறிஞர்களின் கருத்தும், ஐந்து திணைகளும் ஒன்றோடு ஒன்று கலந்து மயங்கி வருவதைப் பற்றியும் இவ்வியலில் ஆராயப்பட்டுள்ளது.

இறுதியில் ஆய்வு முடிவுகள் பற்றித் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. துணை நூற்பட்டியல் ஆய்விற்கு உதவிய இலக்கண, இலக்கிய நூல்களும், ஆய்வேடுகளும், கட்டுரைகளும் அகர வரிசையில் தரப்பட்டுள்ளது.

ஆய்வேடு -2

அரசு கலைக் கல்லூரி, சேலம் -7 கல்லூரி ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு (எம்.ஃபில்.,) அளிக்கப்படும் ஆய்வேடு ஆய்வாளர்

கி. தீபா.

நெறியாளர்முனைவர். சீ. குணசேகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.எச்.டி இணைப் பேராசிரியர்,தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி)சேலம் - 636 007.

சூ. இன்னாசி நூல்களில் சமுதாய முன்னேற்றக் கருத்துக்கள்

முன்னுரை

         இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கக் காலமான இச்சூழலிலும் சமுதாயத் தேவையை நிறைவு செய்யச் சிறுகதைகள், நாவல்கள் தோன்றிக் கொண்டு தாம் இருக்கின்றன. அவற்றுள் தனித்தடம் பதித்திருப்பவை பேராசிரியர் சூ. இன்னாசி அவர்களின் படைப்பிலக்கியங்கள். இவர்தம் படைப்பிலக்கியங்கள் சமுதாயச் சிக்கல்களையும், அவற்றைக் களையும் வழிமுறைகளையும் தெளிவாக விளக்குகின்றன. 

சூ. இன்னாசியின் படைப்புகளைக் கருப்பொருளாகக் கொண்டது. பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கத் தமிழ்ப் பேராசிரியர், தலைசிறந்த ஆய்வறிஞர், இலக்கணவாதி, சமூகச் சீர்திருத்தவாதி, மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முகங்கள் சூ. இன்னாசிக்கு உண்டு. இவர் நூல்களில் ஒரு சில நுர்லகள் மட்டுமே எடுத்து ஆய்வதே இவ்வாய்வேட்டின் முக்கியத்துவம் ஆகும்.

ஆய்வு நோக்கம்

சூ. இன்னாசி நூல்களில் சமுதாய முன்னேற்றக் கருத்துக்களை வெளிக் கொணர்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

ஆய்வு எல்லை

சூ. இன்னாசி அவர்களின் வாழ்வும், அவர்களின் சிறுகதைகள், கவிதை, நாடகம் மற்றும் மொழிப்பணி, தமிழர் உணரவும் உயரவும், தமிழர் தடங்கள் தடுமாற்றங்கள், தமிழர் சமுதாயம் கல்வி அரசியல் முதலிய நூல்கள் ஆய்வு எல்லையாகஅமைந்துள்ளது.

ஆய்வு அணுகுமுறை

விளக்கமுறைத் திறனாய்வு முறையில் அணுகுவது இவ்வாய்வின் அணுகுமுறையாகும்.

ஆய்வு ஆதாரம்

இவ்வாய்வு முதன்மை ஆதாரம், துணைமை ஆதாரம் என்ற இரு ஆதார அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூ. இன்னாசி எழுதிய சில நூல்களை முதன்மை ஆதாரமாகவும், இவ்வாய்வுக்கு வலிமை சேர்ப்பதற்குக் காரணமாக அமைகின்ற நூல்கள், இதழ்கள், மதிப்புரைகள் போன்றவை துணைமை ஆதாரமாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளன.

இயல் பகுப்பு

சூ. இன்னாசி அவர்களின் வாழ்வும் பணியும் என்னும் தலைப்பிலமைந்த இந்த ஆய்வு முன்னுரை முடிவுரை நீங்கலாக நான்கு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை,

முன்னுரை இயல் 1. சூ. இன்னாசியின் வாழ்வும் பணியும் இயல் 2. சூ. இன்னாசியின் இலக்கியப் பணி இயல் 3. சூ. இன்னாசியின் மொழிப்பணி இயல் 4. சூ. இன்னாசியின் கட்டுரைப்பணி முடிவுரை

முன்னுரையில் ஆய்வு நோக்கம், ஆய்வு எல்லை, ஆய்வு அணுகுமுறை, ஆய்வு ஆதாரம் ஆகியவை தரப்பட்டுள்ளன.

இயல் 1: சூ இன்னாசியின் வாழ்வும் பணியும்

சூ. இன்னாசி அவர்களின் பிறப்பு, பெற்றோர், கல்வி, அவர் செய்த பணிகள், எழுதிய நூல்கள், பெற்ற பரிசுகள், குடும்பச் சூழல் அரசு விருதுகள் முதலியவை இவ்வியலின் வழி ஆராயப்பட உள்ளது.

இயல் 2: சூ. இன்னாசியின் இலக்கியப் பணி

சூ இன்னாசி அவர்கள் எழுதிய கவிதை, சிறுகதைகள், நாடகங்கள் இவற்றின் மூலம் ஊழல் ஒழிப்பு, வறுமையின்மை போன்ற சமூகத்தில் நிலவும் அவலங்களை எடுத்துரைக்கும் நோக்கமாக இவ்வியல் ஆராயப்பட உள்ளது.

இயல் 3: சூ இன்னாசியின் மொழிப்பணி

சூ. இன்னாசி படைப்புகளில் வரிவடிவம், தெளிவு, எளிமை, பிற மொழியின் தாக்கங்கள் போன்றவை கையாளப்பட்டுள்ளமை பற்றி இவ்வியலின் வழி ஆராயப்பட உள்ளது.


இயல் 4: சூ. இன்னாசியின் கட்டுரைப் பணி

சூ. இன்னாசி அவர்களின் இலக்கியங்கள், காப்பியங்கள் மூலம் அறிஞர்கள் பற்றியும், முனிவர்கள் பற்றியும், தலைவனின் தலைநகர் பற்றியும், பெண்ணின் பெருமைகள் பற்றியும், தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப் பற்றி இவ்வியலில் ஆராயப்பட உள்ளது.