நீத்தார் பெருமை
« முன் பக்கம்: வான் சிறப்பு | திருக்குறள் » பாயிரவியல் » நீத்தார் பெருமை | அடுத்த பக்கம்: அறன் வலியுறுத்தல் »
- 21. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
- வேண்டும் பனுவல் துணிவு.
- ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.
- வேண்டும் பனுவல் துணிவு.
- 22. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
- இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
- உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அது போலத்தான் உண்மையாகவே பற்றுக்களைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
- இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
- 23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
- பெருமை பிறங்கிற்று உலகு.
- நன்மை ஏது, தீமை ஏது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்கள் ஆவார்கள்.
- பெருமை பிறங்கிற்று உலகு.
- 24. உரனென்னுந் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
- வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
- உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
- வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
- 25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
- இந்திரனே சாலுங் கரி.
- புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.
- இந்திரனே சாலுங் கரி.
- 26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
- செயற்கரிய செய்கலா தார்.
- பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரியச் செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்து விட முடியும்.
- செயற்கரிய செய்கலா தார்.
- 27. சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
- வகைதெரி வான்கட்டே உலகு.
- ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.
- வகைதெரி வான்கட்டே உலகு.
- 28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
- மறைமொழி காட்டி விடும்.
- சானறோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
- மறைமொழி காட்டி விடும்.
- 29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
- கணமேயுங் காத்தல் அரிது.
- குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஓரு கணம் கூட நிலைத்து நிற்காது.
- கணமேயுங் காத்தல் அரிது.
- 30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
- செந்தண்மை பூண்டொழுக லான்.
- அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
- செந்தண்மை பூண்டொழுக லான்.
« முன் பக்கம்: வான் சிறப்பு | பொருளடக்கம் | அடுத்த பக்கம்: அறன் வலியுறுத்தல் »