நிரலாக்கம் அறிமுகம்/விண்டோசு நிரலாக்கம்

விண்டோசு நிரலாக்கம் என்பது இன்று உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் மைக்ரோசாப்டின் விண்டோசு இயங்கு சூழலுக்கு அல்லது விண்டோசு மென்பொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிரலாக்கம் ஆகும். விண்டோசு இயங்குதளம் (Windows Operation System), விண்டோசு அலுவலக மென்பொருட்கள் (Windows Office Suite), விண்டோசு வழங்கிகள் (IIS, Widows Servers), விண்டோசு தரவுத்தளம் (Microsoft SQL) என்று பல மென்பொருட்கள் பொதுப் பயனர்களிடமும், வணிகங்களுக்கிடையேயும் அதிகம் பயன்படுத்தப்படுவதால் இத் தளத்தில் பெருந்தொகை நிரலாளர்களால் நிரலாக்கம் செய்யப்படுகிறது.

பயன்படுத்தப்படும் மொழிகள், நிரலகங்கள், கருவிகள் தொகு

மைக்ரோசாப்ட் மொழிகளும் நிரலகங்களும் தொகு

அதிகம் பயன்படுத்தப்படும் பிற மொழிகள் தொகு

நிரலாக்கக் கருவிகள் தொகு

வாய்ப்புக்களும் சிக்கல்களும் தொகு

விண்டோசு பரந்த பயன்பாட்டில் இருக்கும் மென்பொருட்கள் ஆகும். இதனால் இதில் தேர்ச்சி பெறுவது கூடிய தொழில்வாய்ப்புக்களைப் பொற்றுத் தரக் கூடியது. விண்டோசு விசுவல் சூடியோ போன்று வளர்ச்சியடைந்த விருத்திச் சூழல்களையும் கருவிகளையும் கொண்டது. பொருந் தொகை நிரலாளர்கள் இத் தளத்தில் இயங்குவதால் இவை தொடர்பான வளங்களும் நிறைய உண்டு.

அதே வேளை, விண்டோசு நுட்பங்கள் உயர்ந்த உரிமச் செலவுகளைக் (license fees) கொண்டவை. இதன் வளர்ச்சியும் பேணலும் மைக்ரோசாப்டின் விருப்பத்துக்கு உட்பட்டது. இவற்றில் உருவாக்கப்படும் மென்பொருட்கள் விண்டோசு காப்புரிமை உடன்படிக்கைகளுக்கு உட்பட்டவை. பெரும்பாலும் முற்றிலும் விண்டோசு சூழலில் நிரலாக்கம் செய்ய வேண்டிய இருப்பதால் வேறு மென்பொருட்களை அல்லது நுட்பங்களை பயன்படுத்துவதும் கற்றுக் கொள்வதும் சிரமமானதாகும்.