நிரலாக்கம் அறிமுகம்/நடமாடும் செயலி நிரலாக்கம்
நுண்ணறி பேசிகளினதும் கைக் கணினிகளினது பரந்த அறிமுகத்துக்குப் பின்பு (2008) நடமாடும் செயலிகள் பெருமளவும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தொடுதிரை, படம்பிடிகருவி, புவியிடங்காட்டி, சுழல் காட்டி போன்ற கணினியில் இலகுவாக இல்லாத வசதிகளுடன் புதிய வாய்ப்புக்களை நடமாடும் தளம் வழங்கியது. இன்று ஆப்பிள், அண்ரொயிட், பிளக்பேரி, மைக்ரோசோப்ட் ஆகிய பாரிய நடமாடும் தளங்கள் உள்ளன.
நடமாடும் செயலிகளை உருவாக்க இன்று இரண்டு முக்கிய அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு தளத்துக்கும் அவற்றின் சொந்த மொழியில் (Native code) இல் செயலிகளை உருவாக்கல். ஒவ்வொரு தளத்திலும் உள்ள சிறப்புக் கூறுகளைப் பயன்படுத்தி உச்ச பயனர் அனுபவத்தை வழங்க இதுவே சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தளத்துக்கும் ஒரு பதிப்பு உருவாக்க வேண்டும்.
மாற்றாக எச்.ரி.எம்.எல் 5 மற்றும் வலைச்செயலி நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து தளங்களிலும் இயங்கக் கூடிய செயலியை உருவாக்குதல் ஆகும். இந்த முறையில் சில தள வளங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். இரண்டையும் கலந்த அணுகுமுறையும் சில நிரலகங்கள் தருகின்றன.
பயன்படுதப்படும் நிரல் மொழிகள்
தொகுஅனைத்து தளங்களும்
தொகு- எச்.ரி.எம்.எல் 5
- சி.எசு.எசு
- யாவாக்கிறிட்டும் யாவாக்கிறிட்டு நிரலகங்களும்
ஆப்பிள்/ஐ.ஓசு தளம்
தொகு- ஒப்யக்டிவ் சி
- எக்சு,கோட்
அண்ரொயிட் தளம்
தொகு- யாவா