இழைவலுவூட்டு நெகிழிக் குழாய் தொழில்நுட்பம்
இழை வலுவூட்டு நெகிழிக் குழாய்களைத் தயாரிப்பதற்குத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். இவ்வகை இழை வலுவூட்டு நெகிழிக் குழாய்களைத் தயாரிக்க, வெந்நிறுத்து பிசின்களால் கண்ணாடியிழைகளை புதைத்து இறுக்கப்பட்டு வலுவூட்டப்படுகின்றது. இழைவலுவூட்டு நெகிழி என்பது ஒரு கலப்புரு பொருள் ஆகும். இந்தக் கலப்புருப் பொருளைக் கொண்டு வாகன மேலமைப்புகளையும் உருவாக்கலாம். இந்த வகையான கலப்புருப் பொருள் மிக விலை உயர்ந்ததாகவும், ஆயுள் நீடித்தும் இருக்கும் என்பதானால், இதனை விமான மேலமைப்பு கட்டுமான பணிகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
நாம் இந்த நூலில் இழைவலுவூட்டு நெகிழிகளை உருவாக்குவதை பற்றியும், அதன் அதீத பயன்பாடான நெகிழிக் குழாய்களைத் தயாரிக்கும் முறைகளையும் அதன் பயன்பாட்டையும் காண்கிறோம்.