இழைவலுவூட்டு நெகிழிக் குழாய் தொழில்நுட்பம்/இழைவலுவூட்டல்
இழைச் சுற்றல் (Filament winding) என்பது கலப்புருப் பொருட்களின் வடிவங்கள் உருவாக்கும் பொழுது பயன்படுத்தும் ஒரு தொழிநுட்பம் ஆகும். இது உருவார்ப்பு அச்சின் மீது இழைகளை பூசும் தொழிநுட்ப முறையாகும். இதில் உருவார்ப்பு அச்சானது சுற்றிக்கொண்டே இருக்கும், அப்பொழுது இழைப்பூச்சு தாங்கியானது அதன் நெடுவில் நகர்ந்து கொண்டிருக்க இழைகளை அந்த உருவார்ப்பு அச்சின் மீது பூசிக்கொண்டே செல்லும். இந்த முறைக்கு இழைப்பூச்சு முறை என்று பெயர். இந்த முறையில் பயன்படுத்தும் இயந்திரம் இழைச் சுற்று இயந்திரம்.
இழைவலுவூட்டு நெகிழிகள் (இ.வ.நெகிழிகள் - Fibre-reinforced plastic) என்பது கண்ணாடியை சிறு இழைகளாக செய்ததனால் வலுவூட்டிய நெகிழிகள் ஆகும் . இதை கண்ணாடியிழை வலுவூட்டு நெகிழி என்றும் சொல்வர் . இது ஒரு கலப்புருப் பொருள் .