இழைவலுவூட்டு நெகிழிக் குழாய் தொழில்நுட்பம்/இயந்திரங்கள்

இழைச் சுற்று இயந்திரம் என்பது கலப்புரு பொருட்களைக் கொண்டு வடிவம் அமைக்கும் பொருட்களை உருவாக்கும் பொழுது கண்ணாடியிழை , கரிமயிழை போன்ற கலப்பு பொருட்களை பூசுவதற்கு பயன்படும் ஒரு இயந்திரம் ஆகும். இதில் இயந்திரங்களில் இருவகைகள் உண்டு . ஒன்று தொடர் இழைச் சுற்று இயந்திரம் , மற்றொன்று தொடராவிழைச் சுற்று இயந்திரம்.

CFW Machine

தொடர் இழைச் சுற்று இயந்திரம் ( CFW Machine ) என்பது தொடர்ச்சியாக குழாய்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் இயந்திரம் ஆகும். 4 செ.மீ ( 0.087 முழம் (அ) 2.09 விரல் ) நீளம் உள்ள உருக்கு பட்டியால் சுற்றப்பட்ட குழாய்ப் போன்ற அமைப்பில் தொடர்ந்து கண்ணாடியிழைகளைச் சுற்றி கண்ணாடியிழைக் குழாய்களை வேகமாக உற்பத்தி செய்வதற்கு பயன்படும் நவீன இயந்திரம் இது. இழைச்சுற்று இயந்திரம் பலவகைகள் இருந்தாலும், தொடர்ந்து குழாய்களை தயாரிக்கும் இவ்வகையான இயந்திரத்திற்கு தயாரிப்பாளர்களிடம் நன்மதிப்பு உண்டு . இதன் விட்ட அளவை பொருத்து, இந்த இயந்திரங்கள் பெரிதாகவும் சிறிதாகவும் இருக்கும். இதனை ஆங்கிலத்தில் CFW Machine என்றும் , தமிழில் தொ.ரி.சு இயந்திரம் என்றும் சொல்லலாம்.

  • தொஇசு600 (CFW600): 300 - 600 மி.மீ குழாய்கள்
  • தொஇசு2600 (CFW2600) : 300 - 2600 மி.மீ குழாய்கள்
  • தொரிசு4000 (CFW4000) : 300 - 4000 மி.மீ குழாய்கள்