விருந்தோம்பல்
|
« முன் பக்கம்: அன்புடைமை | திருக்குறள் » இல்லறவியல் » விருந்தோம்பல் | அடுத்த பக்கம்: இனியவை கூறல் »
- 81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
- வேளாண்மை செய்தற் பொருட்டு.
- இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
- வேளாண்மை செய்தற் பொருட்டு.
- 82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
- மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
- விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.
- மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
- 83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
- பருவந்து பாழ்படுதல் இன்று.
- விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்புற்றுக் கெட்டொழிவதில்லை.
- பருவந்து பாழ்படுதல் இன்று.
- 84. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
- நல்விருந்து ஓம்புவான் இல்.
- மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
- நல்விருந்து ஓம்புவான் இல்.
- 85. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
- மிச்சில் மிசைவான் புலம்.
- விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயண்படுத்தாமல் இருப்பானா?
- மிச்சில் மிசைவான் புலம்.
- 86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
- நல்வருந்து வானத் தவர்க்கு.
- வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்று போற்றுவர்.
- நல்வருந்து வானத் தவர்க்கு.
- 87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
- துணைத்துணை வேள்விப் பயன்.
- விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.
- துணைத்துணை வேள்விப் பயன்.
- 88. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
- வேள்வி தலைப்படா தார்.
- செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும் போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தாமற் போயிற்றே என வருந்துவார்கள்.
- வேள்வி தலைப்படா தார்.
- 89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
- மடமை மடவார்கண் உண்டு.
- விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
- மடமை மடவார்கண் உண்டு.
- 90. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
- நோக்கக் குழையும் விருந்து.
- அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.
- நோக்கக் குழையும் விருந்து.
« முன் பக்கம்: அன்புடைமை | பொருளடக்கம் | அடுத்த பக்கம்: இனியவை கூறல் »