அன்புடைமை
« முன் பக்கம்: மக்கட்பேறு | திருக்குறள் » இல்லறவியல் » அன்புடைமை | அடுத்த பக்கம்: விருந்தோம்பல் »
- 71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
- புன்கணீர் பூசல் தரும்.
- உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.
- புன்கணீர் பூசல் தரும்.
- 72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
- என்பும் உரியர் பிறர்க்கு.
- அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
- என்பும் உரியர் பிறர்க்கு.
- 73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
- என்போடு இயைந்த தொடர்பு.
- உயிரும் உடலும் போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
- என்போடு இயைந்த தொடர்பு.
- 74. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
- நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
- அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
- நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
- 75. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
- இன்புற்றார் எய்தும் சிறப்பு.
- உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.
- இன்புற்றார் எய்தும் சிறப்பு.
- 76. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
- மறத்திற்கும் அஃதே துணை.
- வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.
- மறத்திற்கும் அஃதே துணை.
- 77. என்பி லதனை வெயில்போலக் காயுமே
- அன்பி லதனை அறம்.
- அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைபிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவது போல இருக்கும்.
- அன்பி லதனை அறம்.
- 78. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
- வற்றல் மரந்தளிர்த் தற்று.
- மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.
- வற்றல் மரந்தளிர்த் தற்று.
- 79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
- அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
- அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?
- அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
- 80. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
- என்புதோல் போர்த்த உடம்பு.
- அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பாகும்.
- என்புதோல் போர்த்த உடம்பு.
« முன் பக்கம்: மக்கட்பேறு | பொருளடக்கம் | அடுத்த பக்கம்: விருந்தோம்பல் »