விக்கிநூல்கள்:பயிற்சி (தொகுத்தல்)
வரவேற்பு | தொகுத்தல் | வடிவமைப்பு | உள்ளிணைப்புகள் | வெளியிணைப்புகள் | பேச்சுப்பக்கம் | கவனம் கொள்க | பதிகை | மறுஆய்வு |
ஒரு சில பாதுகாக்கப்பட்ட பக்கங்களைத் தவிர்த்து, அனைத்துப் பக்கங்களிலும் "தொகு" என்ற 'பொத்தான்' அமைந்துள்ளது; இதன் மூலம் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தைத் தொகுக்க முடியும். விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கையான இது, பார்வையாளர் தான்காண்கிற சொல், இலக்கண மற்றும் கருத்துப் பிழைகளைத் திருத்த வகைசெய்கிறது. நீங்கள் எந்தத் தகவலை உள்ளிட்டாலும் யாரும் மறுக்கொணாத வகையில் தக்க சான்றுகோள்களுடன் தருதல் மிகத் தேவையானது. தாம் படிக்கும் செய்திகள்/கருத்துகளில் ஒருபக்கச்சாய்வு எதுவும் இல்லாததாகப் படிப்பவர் உணரவேண்டும்.அவ்வாறு கொடுக்கப்படாவிட்டால் அவை நீக்கப்படக்கூடும்.
மணல்தொட்டிக்குச் சென்று அங்குள்ள "தொகு" தொடுப்பை சொடுக்கவும். அந்தப் பக்கத்தில் உள்ள உரையுடன் தொகுப்புச் சாளரம் திறக்கும். அதில் உங்கள் மனதுக்கேற்ப உரைகளைச் சேருங்கள்..அல்லது..தமிழ் வெல்க ! என எழுதுங்கள், பிறகு பக்கத்தைச் சேமிக்கவும் சொடுக்கவும். நீங்கள் எழுதிய முதல்வரிகள் இப்போது விக்கிப்பீடியாவில் தெரிவதைப் பாருங்கள் ! கவனிக்க: நீங்கள் தொகுப்பது, மணல்தொட்டிப் பக்கம் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்; இந்தப் 'பயிற்சிப்பக்க'த்தில் அன்று;).
குறிப்பு:தமிழ்த் தட்டச்சு உதவிக்கு:விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு
முன்தோற்றம் காட்டு
தொகுஇனி நீங்கள் பயன்படுத்த வேண்டிய அடுத்த செயல்பாடு முன்தோற்றம் காட்டு பொத்தான். விக்கிப்பீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டி]]யில் சில மாற்றங்களைச் செய்து, பக்கத்தைச் சேமிக்கவும் பொத்தானை அடுத்துள்ள (பார்க்க:படம்) முன்தோற்றம் காட்டு பொத்தானைச் சொடுக்கவும். இப்போது பக்கம் சேமிக்கப்படுவதற்கு முன்னர் பக்கம் எவ்வாறு காண்பிக்கப்படும் எனக் காணலாம். தவறுகள் செய்வது மனித இயல்பு; இந்தச் செயல்பாட்டின் மூலம் அவற்றை நம்மால் சரிசெய்ய இயலும். தவிர, நீங்கள் வடிவமைப்பில் சோதனைகளையும், மற்ற மாற்றங்களையும் செய்யும்போது பக்க வரலாற்றை நிரப்பாமல் எளிதாக வைத்திருக்க உதவும். முன்தோற்றம் கண்டு திருத்தியபின் உங்கள் தொகுப்புகளைச் சேமிக்க மறக்காதீர்கள் !!
தொகுத்தல் சுருக்கம்
தொகுசேமிப்பதற்கு முன், நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களைக் குறித்த விளக்கத்தைத் தொகுத்தல் சாளரம் மற்றும் பக்கத்தைச் சேமிக்கவும்/முன்தோற்றம் பொத்தான்களுக்கு இடையில் உள்ள தொகுத்தல் சுருக்கம் பெட்டியில் இடுவது ஒரு நல்ல வழக்கமாக (அல்லது "விக்கிநன்னெறி") கருதப்படுகிறது. அது மிகச்சிறியதாக இருக்கலாம்; காட்டாகப் பிழைதிருத்தம் என இட்டீர்கள் என்றால், நீங்கள் எழுத்து/இலக்கணப் பிழை திருத்தம் செய்துள்ளீர்கள் எனப் பிறர் அறிய உதவும். தவிர, உங்கள் மாற்றங்கள் இவ்வாறு சிறு பிழைகளைத் திருத்துவதாக இருக்குமேயானால், தவறாது "இது ஒரு சிறு தொகுப்பு" என்பதில் குறியிட மறக்காதீர்கள் (குறியிடவேண்டிய இந்தச் 'சிறுதொகுப்பு' என்பது, நீங்கள் உட்பதிகை செய்திருந்தால் மட்டுமே தோன்றும்படி அமைந்திருக்கும்).