மென்பொருள் வழுநீக்கல்/வழு என்றால் என்ன?

மென்பொருள் பிழையான அல்லது எதிர்பாராத விளைவைக் கொடுக்கும் போது அதனை வழு என்கிறோம். பெரும்பாலான வழுக்கள் மென்பொருள் வடிவமைக்கப்படும் பொழுது அல்லது உருவாக்கப்படும் (மூல நிரலில்) பொழுதுதே ஏற்பட்டுவிடுகின்றன. வழுக்களைக் கண்டுபிடித்து தீர்ப்பது வழுநீக்கல் (debugging) எனப்படுகிறது. வழுக்கள் மென்பொருட்களில் பயன்பாட்டை, பயனர் அனுபவத்தை, தரத்தைப் பாதிக்கும். இதய முடுக்கி, அணு நிலையக் கட்டுப்பாடு, விண்ணோடம் போன்ற உயிர் உய்ய மென்பொருட்களில் அவை உயிருக்கு ஆபத்தானாதாகவும் அமையக் கூடும்.

வழு என்பது ஆங்கிலத்தில் பக் (bug) என அழைக்கப்படுகிறது. கணினி மற்றும் கணினி மென்பொருள் உருவாவதற்கு முன்பிருந்தே பொறியியல் சமூகம் தவறுகளைக் குறிக்க பக் என்ற சொல்லைப் பயன்படுத்தியது. ஆங்கிலத்தில் பக் (bug) என்ற சொல்லுடன் டிபக்ற் (defect), இசு (issue) என்ற சொற்களும் சிறிய வேறுபாடுகளுடன் பயன்படுத்தப்படுவதுண்டு. இவை தொடர்பான அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறைகள் இல்லை. எனினும் பொதுவாக வழு என்பது நிரலில் உள்ள தவறு. டிபக்ற் என்பது வடிவமைப்பு தேவைகளில் இருந்து வேறாக இருப்பது. இசு என்பது வாடிக்கையாளர் முறையிடும் பிரச்சினைகள் ஆகும்.

ஒரு மென்பொருளை உறுதியாக வழு இல்லாமல் உருவாக்க முடியாது என்றே கருதப்படுகிறது. ஆனால் வழுக்கைகளைக் மிகக் குறைவாதாக அல்லது சாத்தியக் குறைவானாதாக ஆக்கவும், அப்படி அவை ஏற்படும் பட்சத்தில் முறையாக கையாளவும் முடியும். மென்பொருள் வடிவமைக்கும் போது அல்லது உருவாக்கும் போதே வழுக்களைக் கண்டுபிடித்து தீர்ப்பது குறைவான வழுக்களைக் கொண்ட ஒரு மென்பொருளை உருவாக்க உதவும் ஒரு முக்கிய செயற்பாடு ஆகும். குறிப்பாக மென்பொருள் சோதனை, மென்பொருள் தரக் கட்டுப்பாடு ஊடாக வழுக்கள் கண்டறியப்பட்டு நீக்கப்படுகின்றன.

வழு என்றால் என்ன என்று பார்த்தோம், வழுக்களின் வகைகள் பற்றி அடுத்து பார்ப்போம்.

வெளி இணைப்புகள் தொகு