பயனில சொல்லாமை
திருக்குறள் > இல்லறவியல்
- 191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
- எல்லாரும் எள்ளப் படும்.
- பலரும் வெறுக்க பயனின்றி பேசுபவனை அனைவரும் எள்ளுவர்.
- எல்லாரும் எள்ளப் படும்.
- 192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
- நட்டார்கண் செய்தலிற் றீது.
- பயனில்லாதவற்றை பலர் முன் பேசுதல், நல்லன அல்லாததை நமக்கு உற்றவருக்கு செய்வதை விட தீங்கானது.
- நட்டார்கண் செய்தலிற் றீது.
- 193. நயனிலன் என்பது சொல்லும் பயனில
- பாரித் துரைக்கும் உரை.
- ஒருவன் பயனின்றி நிறைய பேசினால், அவனால் ஆகும் நன்மை ஏதும் இல்லை
- பாரித் துரைக்கும் உரை.
- 194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
- பண்பில்சொல் பல்லா ரகத்து.
- பயனில்லாத, பண்பில்லாத சொற்களைப் பேசுவதால் இருக்கும் நன்மையும் நீங்கி விடும்.
- பண்பில்சொல் பல்லா ரகத்து.
- 195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
- நீர்மை யுடையார் சொலின்.
- சிறப்பு மிக்கவராயினும் பயனில்லாத சொற்களை கூறினால், அச்சிறப்பு அவரிடம் இருந்து நீங்கி விடும்
- நீர்மை யுடையார் சொலின்.
- 196. பயனில் சொல் பாரட்டு வானை மகன்எனல்
- மக்கட் பதடி யெனல்.
- பயனில்லாது பேசுபவனை மக்களுள் அற்பன் என்பது சரி
- மக்கட் பதடி யெனல்.
- 197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
- பயனில சொல்லாமை நன்று.
- சான்றோர் நன்மை பயக்கக் கூடியதை சொல்லா விட்டாலும், பயன்னற்றதை சொல்ல மாட்டார்கள்
- பயனில சொல்லாமை நன்று.
- 198. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
- பெரும்பயன் இல்லாத சொல்.
- சிறந்தது எது என ஆய்ந்து உணர்ந்த அறிவுடையோர், பயனில்லாததை பேச மாட்டார்கள்
- பெரும்பயன் இல்லாத சொல்.
- 199. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
- மாசறு காட்சி யவர்.
- அப்பழுக்கற்ற அறிவுடையவர் பொருளற்ற, குறை உள்ள சொல் கூற மாட்டார்கள்
- மாசறு காட்சி யவர்.
- 200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
- சொல்லிற் பயனிலாச் சொல்.
- சொல்லில் பயனில்லாததைத் தவிர்த்து, பயனுள்ளதைப் பேச வேண்டும்
- சொல்லிற் பயனிலாச் சொல்.