கட்டுரை-----அன்னையர் தினம்                                                                                        உலகில் தாய்க்கு ஈடாக எதையும் ஒப்பிட முடியாது.அனைத்து உயிர்களையும் தன்னால் பாதுகாக்க முடியாது என்பதனால்தான் இறைவன் தாயைப் படைத்துள்ளான். தாயிற் சிறந்த கோயிலில்லை என்பது ஆன்றோர் வாக்கு.ஒரு பெண் தன் வாழ்நாளில்எத்தனைபாத்திரங்களாக வாழ்ந்தாலும் தாய் என்ற பாத்திரம் உன்னதமானது.                                                                                                         சிறந்த சமுதாயத்தை உருவாக்க அன்னையர்களின் பங்களிப்பு முக்கியம். தரையில் பொறுமை மிக்க பாவையாகப் பெண்கள் படைக்கும் பாத்திரங்கள் பரிசுத்தமானவை.அன்று பாரதியார் பெண் அடிமை ஒழிக்க அரும் பாடு பட்டார்.அன்னை ஜர்விஸ் என்பவரால் மேற்கு விர்ஜினியாவில் கிராப்டன் என்னும் நகரில் அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது.ஆயிரத்துத் தொளாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு வைகாசி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படும் என அன்னை ஜர்விஸ் பிரகடனம் செய்தார். ஜர்விஸ் அவர்கள் அறிவித்த நாளை நாற்பத்தாறு நாடுகள் அங்கீகரித்து இதே நாளில் அன்னையர் தினம் கொண்டாடுவதாக அறிவித்தன.ரஸ்யாவில் அலெக்சாண்டர் கெலன்ரா ஆண்டுதோறும் பங்குனி மாதம் எட்டாம் திகதி அன்னையர் தினம் கொண்டாடப்படும் எனப் பிரகடனம் செய்தார். இதையடுத்து ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தோராம் ஆண்டு இத்தினம் உலகெங்கும் கொண்டாடப்டுகிறது. ஐக்கியநாடுகள்சபை ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தைந்தாம் ஆண்டை மகளிர் ஆண்டாகப்  பிரகடனம் செய்தது. ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத் தக்கது                     சமூகத்தில் ஒரு தாயாக சகோதரியாக நண்பியாக ஆசிரியையாக சேயாகப் பாரெங்கும் புகழ் பரப்பும் பெண்மையைப் போற்றி மகிழ்வோம். சிறந்த சமுதாயத்தை உருவாக்க அன்னையரின் பங்களிப்பு முக்கியம். நாம் இவ்வுலகைக் காண வாத்த அன்னையர்களை வாழ்த்தி வணங்குவோம்
"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்:Kandgaledchumy.Tharmalingam&oldid=16900" இலிருந்து மீள்விக்கப்பட்டது