நிரலாக்கம் அறிமுகம்/நிரல் கூறுகள்
எல்லா நிரல் மொழிகளும் மூன்று அடிப்படைக் கூறுகளால் ஆனவை:
- கூற்றுக்கள் (statements): எதாவது ஒரு செயலை நிறைவேற்றுவது. விடை ஒன்றைக் கட்டாயம் தராமல், ஒரு விளைவை (side effect) ஏற்படுத்துவதுன. எ.கா: $அ = 100; என்பது ஒரு கூற்று ஆகும்.
- கோவைகள் (expressions): கோவை என்பது மாறிகள், மாறிலிகள், செயற்குறிகள், செயலிகள் போன்றவை சேர்ந்து விதிகளுக்கு அமைய மதிப்பீடு செய்து விடையைத் தருவது. இது விளைவுகளை ஏற்படுத்தாது.
- மாறிகள் (variables): மாறிகள் என்பது தரவுகளுக்கான சுட்டி அல்லது சேமிப்பகங்கள்.
கட்டுப்பாடு, சுழற்சி, அணி, வகுப்பு, செயலி போன்ற ஒரு நிரலாக்க மொழியின் பல்வேறு கூறுகள் மேற்கூறிய அடிப்படை வகைக்குள் அடங்கும். மொழியின் வடிவமைப்பைப் பொறுத்து கூற்றுக்கள் அல்லது கோவைகள் முதன்மைப்படுத்தப் பட்டு இருக்கும். Imperative மொழிகள் கூற்றுக்களை முதன்மையாகப் பயன்படுத்தி கணித்தலைச் செய்கின்றன. பணிநோக்கு (functional) மொழிகள் கோவைகளை முதன்மையாகப் பயன்படுத்துகின்றன.