நிரலாக்கம் அறிமுகம்/தரவுத்தளப் பயன்பாடு
ஒரு மென்பொருளை உருவாக்கும் போது அந்த மென்பொருள் தொடர்பான தரவுகளை ஒழுங்குபடுத்திச் சேமிக்க தரவுத்தளங்கள் பயன்படுகின்றன. நெடுங்காலமாக தொடர்புசால் தரவுத்தளங்களே (Relational Databases) பெருதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எசு.கியூ.எல் (SQL) அல்லது வினவல் மொழியைப் பயன்படுத்தின. இன்று சில குறிப்பிட்டதேவைகளுக்காக நோ.எசு.கியூ.எல் (NoSQL) வகை தரவுத்தளங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று பல கட்டற்ற மற்றும் வணிக தொடர்புசால் தரவுத்தளங்கள் பயன்பாட்டில் உள்ளன. போசுகிரசு (PostgreSQL), மைசீக்குவல் (MySQL) ஆகியவை நன்கு அறியப்பட்ட கட்டற்ற தரவுத்தளங்கள் ஆகும். இதில் மைசீக்குவலின் கட்டற்ற நிலை சற்று கேள்விக்குட்பட்டது. ஆனால் அதில் இருந்து கவைசெய்யப்பட்ட (fork) பல உறுதியான கட்டற்ற உரிமம் கொண்ட தரவுத்தளங்கள் (எ.கா MariaDB, Drizzle) உள்ளன. ஓராக்கிள் (Oracle), மைக்ரோசாப் எசு.கியூ.எல் (Microsoft SQL), டிபி2 (DB2) ஆகியவை அதிக பயன்பாட்டில் உள்ள வணிக தரவுத்தளங்கள் ஆகும்.
இந்த தரவுத்தளங்களை அணுக நிரல் மொழிகள் அவற்றுக்கான செயலி நிரலாக்க இடைமுகங்களைக் (API for database access) கொண்டுள்ளன. எ.கா யாவா மொழியில் யே.டி.பி.சி (JDBC) பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பி.எச்.பி மொழியில் பி.டி.ஓ (PDO) பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இடைமுகங்கள் பல தரவுத்தளங்களுக்கான driver கொண்டுள்ளன.