சதுரங்கம்
வரவேற்கிறோம்
தொகுசதுரங்கம் மனித இனத்தின் பிரபல விளையாட்டுக்களில் ஒன்றாகும். இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. இது சில சமயம் ஒரு abstract போர் விளையாட்டாகவும், "மூளை சார்ந்த போர்க்கலை"யாகவும் பார்க்கப்படுவதுண்டு. சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், கழகங்களிலும், சுற்றுப்போட்டிகளிலும், இணையத்திலும், தபால் மூலமும்கூட விளையாடப்படுகின்றது. பல விதமான சதுரங்கம் விளையாட்டும், அதனுடன் தொடர்புடைய விளையாட்டுக்களும் உலகமெங்கிலும் விளையாடப்படுகின்றன.
அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்படும் சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாகக் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். சதுரங்கம் அதிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும்.