குழந்தைப் பாடல்கள்/ரொட்டி

ரொட்டி ரொட்டி ரொட்டி

கிட்டு இங்கே ஓடி வா

துட்டுக் கொடுத்து வாங்கலாம்

துண்டுத் துண்டாய் வெட்டலாம்!


கட்டிக் கட்டி வெண்ணெயில்

இனிப்பு சர்க்க்கரை சேர்த்துமே

தொட்டுத் தொட்டுத் தின்னலாம்

தோழனே நீ ஓடி வா.