குழந்தைப் பாடல்கள்/ரயில்வண்டி
ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு ரயில் வண்டி
திருச்சி போகும் ரயில் வண்டி
கட கட ரயில் வண்டி
கடலூர் போகும் ரயில் வண்டி
குப்குப் குப்குப் ரயில் வண்டி
குடந்தை போடும் ரயில் வண்டி
கூ கூ கூகூ ரயில் வண்டி
கூனூர் போகும் ரயில் வண்டி
தட தட ரயில் வண்டி
தஞ்சை போகும் ரயில் வண்டி
தண்டவாளம் இரண்டினிலே
தாளம் போட்டேச் சென்றிடுமே