குழந்தைப் பாடல்கள்/மோட்டார்

'பாம்', "பாம்" என்ற சத்தமுடன்

பாதையில் மொட்டார் பார்! பார்! பார்!

'ஜாம்', 'ஜாம்' என்றே அதிலேறிச்

சவாரி செய்வோம் வா! வா! வா!நான்தான் காரை ஓட்டிடுவேன்

நாலா புறமும் சுற்றிடலாம்

'டாண்', 'டாண்' பள்ளிக் கூட மணி

நம்மை அழைக்கச் சென்றிடுவோம்