குழந்தைப் பாடல்கள்/பொட்டிவண்டி

பூ பூ

புளியம்பூ

பொன்னிறக் கொண்டைக்குத்

தாழம்பூ

தாழம்பூ வெச்சிக்கிட்டு-

தானா கொஞ்சம் சிரிச்சிக்கிட்டு


பொண்ணு வருது பொண்ணு வருது

பொட்டி வண்டியிலே

பொண்ணப் பெத்த அம்மா வரா

பொத்தல் வண்டியிலே-


மாப்பிளை வரார் மாப்பிளை வரார்

மாட்டு வண்டியிலே

மாமா வர வண்டியைப் பாரு

ஒன்னும் நல்லால்லே


மாடு ரெண்டும் மொட்டை

ஓட்டுறவன் குட்டை

கயிறு ரெண்டும் கட்டை

சலங்கை பூரா சொட்டை