குழந்தைப் பாடல்கள்/பழங்கள்

அப்பா தந்தார் ஆரஞ்சு.

அம்மா தந்தார் ஆப்பிள்.

அண்ணன் தந்தான் அன்னாசி.

அக்காள் தந்தாள் தக்காளி.

தாத்தா தந்தார் திராட்சை.

பாட்டி தந்தாள் பலாப்பழம்.

அத்தை தந்தாள் மாதுளை.

மாமா தந்தார் மாம்பழம்.