குழந்தைப் பாடல்கள்/தென்னை

எங்கள் வீட்டுத் தென்னையே

இளநீர் கொடுக்கும் தென்னையே

பந்தல் போடும் கீற்றையே

பாங்காய் அளிக்கும் தென்னையேதலையை விரித்துக் காற்றிலே

சந்தோசமாய் ஆடுவாய்

குலை குலையாய்க் காய்களைக்

கொடுப்பாய் மக்கள் வாழவே