குழந்தைப் பாடல்கள்/சைக்கிள்வண்டி

தம்பி இங்கே பார் பார்

சைக்கிள் வண்டி பார் பார்

மாடு குதிரை இன்றியே

மணிக்கணக்கில் ஓடிடும்


ஏறிப் பெடலை அழுத்தினால்

எந்த ஊரும் போகலாம்

நீயும் சேர்ந்து ஏறினால்

நினைத்த இடமும் போகலாம்