குழந்தைப் பாடல்கள்/சேவல்

பாஞ்சாலங் குறிச்சியிலே

வாங்கி வந்த சேவல்


பழமதுரைப் பட்டணத்தைப்

பார்த்து வந்த சேவல்


கொச்சிமலை யாளமெல்லாம்

கொடியெடுத்த சேவல்


கும்ப கோணம் தஞ்சாவூர்

குமுறி வந்த சேவல்


கொல்லிமலை குடகு மலை

கூத்தடித்த சேவல்


கொக்கரித்துப் பறந்து வரும்

குமரேசன் சேவல்


பூமியெல்லாம் சுற்றிவந்து

பொங்கி நிற்கும் சேவல்


பொன்னுருக்கு மேனி கொண்ட

புத்தம் புது சேவல்.
"https://ta.wikibooks.org/w/index.php?title=குழந்தைப்_பாடல்கள்/சேவல்&oldid=12774" இலிருந்து மீள்விக்கப்பட்டது