குழந்தைப் பாடல்கள்/சுண்டெலிக் கல்யாணம்
அப்பாப் பையன் மகன்
- சுப்பாக்குட்டி
சுப்பாக்குட்டி பிள்ளை
- சுண்டெலியாம்
சுண்டெலி ராசனுக்குக்
- கல்யாணமாம்
சொளத்தட்டுப் பல்லாக்கு
- ஊர்கோலமாம்.
பாம்பைக் கூப்பிடுங்கள்
- பல்லாக்குத் தூக்கட்டும்
பல்லியைக் கூப்பிடுங்கள்
- பராக்குப் பார்க்கட்டும்
தவளையைக் கூப்பிடுங்கள்
- தாரை ஊதட்டும்
சேவலைக் கூப்பிடுங்கள்
- கொம்பு முழங்கட்டும்
பாடல் -2
தொகுசுண்டெலிக்கும் சுண்டெலிக்கும்
- கல்யாணமாம்
பூலோகமெல்லாம்
- கொண்டாட்டமாம்
ஓரெலி ஓடிவந்து
- ஊருக்கெல்லாம் சொல்லிச்சாம்
இரண்டெலி ஓடிவந்து
- ரத்திணக் கம்பளம் போட்டுச்சாம்
மூவெலி ஓடிவந்து
- முக்காலி போட்டுச்சாம்
நாலெலி ஓடி வந்து
- நாதசுரம் ஊதிச்சாம்
ஐந்தெலி ஓடிவந்து
- மஞ்சளை அரைச்சதாம்
ஆறெலி ஓடிவந்து
- ஆட்டமாய் ஆடிச்சாம்
ஏழெலி ஓடி வந்து
- ஏணி மேலே ஏறிச்சாம்
எட்டெலி ஒடி வந்து
- எட்டி எட்டி பார்த்துச்சாம்
ஒன்பதெலி ஓடி வந்து
- ஒய்யாரமய் நின்னுச்சாம்
பத்தெலி ஓடிவந்து
- பணியாரம் தின்னுச்சாம்