குழந்தைப் பாடல்கள்/சாய்ந்தாடு

சாய்ந்தாடம்மா

சாய்ந்தாடு

சாயக்கிளியே

சாய்ந்தாடு

தங்கச் சிலம்பே

சாய்ந்தாடு

தாமரைப் பூவே

சாய்ந்தாடு

சோலைக்கிளியே

சாய்ந்தாடு

சுந்தர மயிலே

சாய்ந்தாடு

கண்ணே மணியே

சாய்ந்தாடு

கற்பகக் கொடியே

சாய்ந்தாடு

குத்து விளக்கே

சாய்ந்தாடு

கோவில் புறாவே

சாய்ந்தாடு