குழந்தைப் பாடல்கள்/காய்கறிகள்

குட்டை குட்டை கத்தரிக்காய்
குண்டு குண்டு சுண்டைக்காய்


நெட்டை நெட்டை முருங்கைக்காய்
நீண்டு தொங்கும் புடலங்காய்


வழவழப்பாய் வெண்டைக்காய்
வாட்டமான பூசணிக்காய்


பச்சை பச்சை பாகற்காய்
பட்டை போட்ட பீர்க்கங்காய்


வீட்டில் காய்க்கும் காய்களே
வீதியில் விற்கும் காய்களே.