குழந்தைப் பாடல்கள்/கதை கதையாம்
- கதை கதையாம் காரணமாம் !
- கதை கதையாம் காரணமாம்
- காரணத்தில் ஒரு தோரணமாம்
- தோரணத்தில் ஒரு துக்கடாவாம்
- துக்கடாவில் கொஞ்சம் வைக்கோலாம்
- வைக்கோல எடுத்து மாட்டுக்குப் போட்டா
- மாடு பால் கொடுத்ததாம்
- பாலைக் கொண்டுபோய் கடையில ஊத்துனா
- கடைக்காரன் தேங்காய் கொடுத்தானாம்
- தேங்காய் ஒடைக்க கல்லுக்குப் போனா
- கல் எல்லாம் பாம்பாம்
- பாம்ப அடிக்கத் தடியத் தேடினா
- தடி எல்லாம் சேறாம்
- சேறு கழுவ ஆத்துக்குப் போனா
- ஆறெல்லாம் மீனாம்
- மீனப் புடிக்க வலைக்குப் போனா
- வலை எல்லாம் ஓட்டையாம்
- ஓட்டைய அடைக்க ஊசிக்குப் போனா
- ஊசிக்காரன் ஊருக்குப் போயிட்டானாம்