குழந்தைப் பாடல்கள்/ஆமையார்

ஆமையார் ஆமையார்

அசைந்து அசைந்து நடக்கிறார்

மூட்டை தூக்கும் ஆமையார்

ஓட்டுள் பதுங்கும் ஆமையார்


குள்ள மாமி வீட்டுக்கு

மெல்ல மெல்லப் போகிறார்

மாமி வீடு போகவே

மாதம் ஆறு ஆகுமே