குழந்தைப் பாடல்கள்/ஆடும் குதிரை

அழகு மிக்க குதிரை
ஆட்டம் ஆடும் குதிரை
முன்னும் பின்னும் அசையவே
துள்ளி மகிழ்ந்து ஆடுவேன்
புல்லும் கொள்ளும் தின்னாது
கோதுமை அல்வா கேட்காது
பெட்ரோல் எதுவும் வேண்டாமே
நானே துள்ளி ஆடிடுவேன்