குழந்தைப் பாடல்கள்/அம்மா

தேன் தேன்
என்ன தேன்
கொம்பு தேன்
என்ன கொம்பு
மான் கொம்பு
என்ன மான்
புள்ளி மான்
என்ன புள்ளி
இலை புள்ளி
என்ன இலை
வாழை இலை
என்ன வாழை
ரச வாழை
என்ன ரசம்
மிளகு ரசம்
என்ன மிளகு
வால் மிளகு
என்ன வால்
நாய் வால்
என்ன நாய்
மரநாய்
என்ன மரம்
வேர் மரம்
என்ன வேர்
வெட்டிவேர்
என்ன வெட்டி
பாக்கு வெட்டி
என்ன பாக்கு
கொட்டப் பாக்கு
என்ன கொட்ட
மாங்கொட்ட
என்ன மா
அம்மா