உணவும் ஊட்டச்சத்தும் அடிப்படைகள்/காபோவைதரேட்டு

உடலின் அன்றாட தொழிற்பாடுகளுக்கு ஆற்றல் தேவை. அந்த ஆற்றலை உடலில் உள்ள உயிரணுக்கள் குளுக்கோசு அல்லது சர்க்கரை எனப்படும் மூலப்பொருளின் ஊடாகப் பெறுகின்றன. குளுக்கோசு நாம் உண்ணும் உணவில் இருந்து பெறப்படுகிறது. காபோவைதரேட்டு ஊட்டக்கூறு கொண்ட உணவுகளே குளுக்கோசாக மாற்றப்பட்டு உடலுக்கு ஆற்றல் வழங்குகின்றன. காபோவைதரேட்டு நமக்குத் தேவையான ஆறு முக்கிய ஊட்டக்கூறுகளில் ஒன்று.

பெறப்படும் உணவுகள் தொகு

பின்வரும் உணவுகள் காபோவைதரேட்டு நிறைந்த பொருட்கள் ஆகும்.

  • தானியங்கள் (நெல், கோதுமை, சோளம், வரகு, திணை, சாமை, கம்பு)
  • பரப்புகள்
  • மரக்கறிகள், கிழங்குகள் (கத்தரி, வெண்டி, மரவள்ளி, பூசணி, உருளைக்கிழங்கு)
  • பழங்கள் (மா, பலா, வாழை, பப்பாளி)
  • கொட்டைகள் (கச்சான், முந்திரி, பிரேசில் கொட்டை)
  • பாலுணவுகள்
  • இனிப்புகள்

காபோவைதரேட்டு எளிய காபோவைதரேட்டு சிக்கலான காபோவைதரேட்டுக்கள் என இரு வகையாக வகைப்படுத்துவதுண்டு. வேகமாக உடலால் குளுக்கோசாக மாற்றப்படக் கூடிய உணவுகள் எளிய காபோவைதரேட்டு எனவும் அவ்வாறு செய்யப்பட முடியாவதை சிக்கலான காபோவைதரேட்டாகவும் கொள்ளப்படுகிறது. இனிப்புகள், பழங்கள், பாலுணவுகள் எளிய காபோவைதரேட்டுக்கள். முழுத் தானியங்கள், மாப்பொருள் கொண்ட மரக்கறிகள், பரப்புக்கள் போன்றவை சிக்கலான காபோவைதரேட்டு.

தேவைப்படும் அளவு தொகு

உட்கொள்ளப்படும் உணவுகளில் 45 இருந்து 65% வரைக்கும் முதன்மையாக காபோவைதரேட்டைக் கொண்டிருக்க வேண்டும் என அமெரிக்க அரச உணவுக் கையேடு பரிந்துரைக்கிறது.[1] ஆனால் அண்மைக் காலத்தில் வெளிவந்த ஆய்வுகள் சில காபோவைதரேட்டைக் அதை விடக் குறைவாக உண்ணுவது கூடிய பலனைத் தரலாம் என்று கூறி உள்ளன.

செயற்பாடு தொகு

நாம் காபோவைதரேட்டு கொண்ட உணவுகளை உண்டு, செமிபாட்டின் பின்பு இரத்திதில் குளுக்கோசின் அளவு உயரும். அவ்வாறு உயரும் போது அதைக் கட்டுப்படுத்தும் வண்ணம் கணையம் இன்சுலீனைச் சுரக்கும். உயிரணுக்கள் குளுக்கோசை உள்வாங் இன்சுலீன் உதவி, இரத்தில் உள்ள குளுக்கோசு நிலையை சீர்படுத்தும். குளுக்கோசை உயிரணுக்கள் தமது செயற்பாடுகளுக்கு ஆற்றலாகப் பயன்படுத்தும்.

மேற்கோள்கள் தொகு

  1. Understanding the USDA Food Pyramid