ஈசாப் நீதிக் கதைகள்/விவசாயியும், மகன்களும்

ஒரு விவசாயி இறக்கும் தறுவாயில் இருந்தார். தன்னுடைய மகன்களை அழைத்தார். "நான் சீக்கிரமே இறக்க போகிறேன். நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். நம்முடைய திராட்சை தோட்டத்தில் ஒரு புதையல் புதைக்கப்பட்டுள்ளது. அங்கு தோண்டுங்கள், நீங்கள் புதையலை கண்டுபிடிப்பீர்கள்" என்றார். தங்களது தந்தை இறந்த உடனேயே மகன்கள் மண்வெட்டி மற்றும் கடப்பாரையை எடுத்து கொண்டு திராட்சை தோட்டத்திலிருந்த மண்ணை தோண்ட ஆரம்பித்தனர். அங்கு புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட புதையலைத் தேடினர். அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால் பெரும்பாலான இடங்களில் தோண்டப்பட்டதன் காரணமாக திராட்சை கொடிகள் நன்றாக செழித்து வளர்ந்தன. அவர்களுக்கு அதற்கு முன்னர் என்றுமே கிடைத்திராத அறுவடையை கொடுத்தன.


நீதி: ஒரு மனிதனின் மிகப்பெரிய புதையல் அவனது உழைப்பு ஆகும்.