ஈசாப் நீதிக் கதைகள்/விவசாயியும், பாம்பும்

ஒரு விவசாயியின் வீட்டின் முன் கதவை சுற்றி ஒரு பாம்பு திரிந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அப்பாம்பு விவசாயியின் மகனை அவனது காலில் கடித்தது. அச்சிறுவன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான். அச்சிறுவனின் பெற்றோர் மிகுந்த துயரமடைந்தனர். அந்த விவசாயி தன்னுடைய கோடாரியை எடுத்து அப்பாம்பை கொல்ல முயன்றான். பாம்பு தப்பித்து சென்ற போது அதை விவசாயி துரத்தினான். தன்னுடைய ஆயுதத்தின் மூலம் அதை கொல்ல முயன்ற போது அவரால் அப்பாம்பின் வாலை மட்டுமே துண்டாக்க முடிந்தது. தான் அந்த பாம்பை கொன்று இருக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு பயத்தை ஏற்படுத்தியது. எனவே தேன் மற்றும் உப்புடன், ரொட்டித் துண்டு மற்றும் நீரை எடுத்துக் கொண்டு பாம்பை அவன் அழைத்தான். அதனுடன் அமைதி வேண்டினான். ஆனால் பாறைகளில் ஒளிந்து கொண்டிருந்த அந்த பாம்பு சத்தம் எழுப்பியவாறு விவசாயிடம் கூறியதாவது "மனிதனே, வீணாக சிரமப்படாதே. நமக்கு இடையில் நட்புறவு என்பதற்கு இனி வாய்ப்பில்லை. என்னுடைய வாலை நான் பார்க்கும் போது எனக்கு வலி ஏற்படும். அதே போல உன்னுடைய மகனின் சமாதியை எப்போதெல்லாம் நீ காண்கிறாயோ அப்போதெல்லாம் உனக்கு துயரம் ஏற்படும். என்னுடன் அமைதியான நிலையில் உன்னாள் வாழ முடியாது" என்றது.


நீதி: நடந்த துயரம் ஒருவருக்கு மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வரை ஒரு நாளும் வெறுப்பு அல்லது பழி வாங்குவதற்கான எண்ணங்களை தவிர்க்க இயலாது.