ஈசாப் நீதிக் கதைகள்/விவசாயியும், அவனது நாய்களும்

ஒரு விவசாயி தன் கிராமத்து பண்ணையில் ஒரு பனிப் புயலின் போது மாட்டிக் கொண்டான். அவனுக்கு உண்ண எந்த உணவும் கிடைக்கவில்லை. எனவே அவன் முதலில் தன்னுடைய செம்மறியாடுகளையும், பிறகு தன்னுடைய ஆடுகளையும் உண்டான். புயல் மோசமான போது தன்னுடைய கலப்பையை இழுத்துச் செல்லும் காளைகளையும் கூட கொன்றான். நடந்து கொண்டிருப்பதைக் கண்ட நாய்கள் ஒன்று மற்றொன்றிடம் கூறியதாவது "இங்கிருந்து நாம் இப்பொழுதே சென்று விட வேண்டும். தனக்காக கடுமையான உழைத்த காளைகளையே அவர் விட்டு வைக்காத போது, நாம்மை மட்டும் எப்படி விட்டு வைப்பார்?" என்றது.


நீதி: தன் சொந்த மக்களையே நன்முறையில் நடத்தாதவனை விட்டு விலகு.