ஈசாப் நீதிக் கதைகள்/விவசாயியின் மகன்கள்

முன்னொரு காலத்தில் ஒரு மிகுந்த வயது முதிர்ந்தவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு பல மகன்கள் இருந்தனர். தன்னுடைய வாழ்நாள் முடியும் தருவாயில் தன்னுடைய மகன்களிடம் ஒரு மெல்லிய குச்சிகளின் கட்டை கொண்டு வருமாறு முதியவர் வேண்டினார். அங்கு சில குச்சிகள் கட்டாகக் கிடந்தன. அவரது மகன்களில் ஒருவர் அந்த கட்டை தன் தந்தையிடம் கொண்டு வந்தார். "தற்போது உங்களுடைய பலம் முழுவதையும் திரட்டி ஒன்றாக கட்டப்பட்ட இந்த குச்சிகளை உடையுங்கள்" என்றார். அவர்களால் இயலவில்லை. பிறகு "தற்போது அவற்றை ஒவ்வொன்றாக உடையுங்கள்" என்றார். ஒவ்வொரு குச்சியும் எளிதாக உடைக்கப்பட்டது. அவர் கூறியதாவது "மகன்களே, நீங்கள் அனைவரும் ஒரே மனதுடன் இருந்தால் எதிரி எவ்வளவு வலிமையானவனாக இருந்தாலும் உங்களுக்கு தீங்கு செல்ல இயலாது. ஆனால் உங்களது எண்ணங்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருடன் மாறுபடும் எனில் இந்த ஒற்றை குச்சிகளுக்கு ஏற்பட்ட நிலைமை தான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும்" என்றார்.


நீதி: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.