ஈசாப் நீதிக் கதைகள்/வல்லூறும், இராப்பாடியும்
ஓர் இராப்பாடி கருவாலி மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு தன் வழக்கப்படி பாடிக் கொண்டிருந்தது. ஒரு பசியுடைய வல்லூறு அப்போது அதைக் கவனித்துக் கொண்டிருந்தது. அங்கு அம்பு போல பறந்து சென்று தனது நகங்களால் இராப்பாடியை வல்லூறு பிடித்தது. இராப்பாடியைத் துண்டு துண்டுகளாக வல்லூறு கிழிக்க இருந்த நேரத்தில் தன்னை உயிரோடு விட்டு விடுமாறு இராப்பாடி மன்றாடியது. "உனக்கு நல்ல உணவாக ஆகுவதற்குப் போதிய அளவுக்குப் பெரிய அளவில் நானில்லை. நீ உன்னுடைய இரையைப் பெரிய பறவைகள் மத்தியில் தேடலாம்" என்று கூறியது. அந்த இராப்பாடியை வல்லூறு ஏளனத்துடன் பார்த்தது. "கண்ணிலே படாத பெரிய பறவையை விட, தற்போது என்னிடம் பிடிபட்டுள்ள சிறிய பறவையே மேல்" என்று அந்த வல்லூறு கூறியது.