ஈசாப் நீதிக் கதைகள்/மனிதனும், சட்டைர் கடவுளும்

ஒரு மனிதனும், ஒரு சட்டைர் கடவுளும் நண்பர்களாயினர். அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வது என முடிவு எடுத்தனர். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில் குளிர் காலத்தின் ஒரு நாளில் தனது கைகளில் மனிதன் ஊதிக் கொண்டிருப்பதை சட்டைர் கண்டது. "ஏன் இதைச் செய்கிறாய்?" அது கேட்டது. "என்னுடைய கைகளை கதகதப்பாக வைக்க" என்றான் மனிதன். அதே நாள் அவர்கள் இருவரும் இரவு உணவுக்காக ஒன்றாக அமர்ந்தனர். அவர்கள் இருவருக்கும் ஒவ்வொரு கிண்ணத்தில் சூடான நீராவி பறக்க கூடிய கஞ்சி வழங்கப்பட்டது. மனிதன் அந்த கிண்ணத்தை கையிலெடுத்து தனது வாய்க்கு அருகில் வைத்து ஊதினான். "ஏன் இதைச் செய்கிறாய்?" அது கேட்டது. "என்னுடைய உணவை குளிராக்க" என்றான் மனிதன். சட்டைர் மேசையில் இருந்து எழுந்தது. "நான் வருகிறேன்" என்றது. "நான் செல்கிறேன், ஏனெனில் ஒரே வாயில் சூடான மற்றும் குளிர்ந்த காற்றை ஊதும் ஒரு மனிதனுடன் என்னால் நண்பனாக இருக்க முடியாது" என்றது.


நீதி: குழப்பமான குண நலனை கொண்டவர்களுடைய நட்பை நாம் முறிக்க வேண்டும்.