ஈசாப் நீதிக் கதைகள்/பெருமை பேசுபவன்

ஒரு மனிதன் ஐந்து விளையாட்டு போட்டிகளை கொண்ட தொகுதியை பயின்று வந்தான். ஆனால் அவனுடைய சக குடிமக்கள் அவன் வலிமையானவனாக இல்லை என்று தொடர்ந்து இடித்துரைத்து வந்தனர். அவன் ஒரு நாள் அயல்நாடுகளுக்கு சென்றான். சில காலத்திற்கு பிறகு மீண்டும் திரும்பி வந்தான். பல்வேறு நாடுகளில் பல சிறந்த சாதனைகளை செய்ததாக அவன் பெருமை பேசினான். அவற்றில் எல்லாம் மேலாக ரோட்ஸ் தீவில் இருந்த போது தான் ஒரு தாண்டுதலில் பங்கெடுத்ததாகவும், அதை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்ற ஒரு தடகள வீரனாலும் கூட சமமாக்க இயலாது என்றும் கூறினான். தனது சாதனையை நேரில் கண்ட மக்களை சாட்சிகளாக தன் நாட்டிற்கு அவர்கள் வந்தால் அழைத்து வருவேன் என்றும் கூறினான். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த ஒருவன் கூறியதாவது "நீ கூறுவது உண்மையெனில், நண்பா, உனக்கு சாட்சிகள் தேவையில்லை. ஏனெனில், நீ தற்போது ரோட்ஸ் தீவில் தான் நின்று கொண்டிருக்கிறாய், தாவு" என்றான்.


நீதி: இங்கு செயல்களுக்கு மட்டுமே மதிப்பு, வெறும் வார்த்தைகளுக்கு அல்ல.