ஈசாப் நீதிக் கதைகள்/புத்திசாலி தகைவிலான் குருவி

ஒன்றாக பறந்து திரிந்த சில பறவைகள் ஒரு மனிதன் ஆளி விதைகளை நடுவதை கண்டன. ஆனால் அதைப் பற்றி அவை எதுவும் எண்ணவில்லை. எனினும் தகைவிலான் குருவி இதன் பொருள் புரிந்தது. அது பறவைகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இது ஒரு மோசமான சூழ்நிலை என்பதை விளக்கியது. ஆனால் மற்ற பறவைகள் தகைவிலான் குருவியைக் கண்டு சிரித்தன. ஆளி விதை துளிர் விட்ட போது தகைவிலான் குருவியானது பறவைகளை மீண்டும் எச்சரித்தது. "இது ஏதோ மோசமான ஒன்று. நாம் சென்று அதை பிடுங்கி எறியலாம். நாம் இதை வளர அனுமதித்தால் இதன் மூலம் மக்கள் வலைகளை தயாரிப்பார்கள். அவர்கள் உருவாக்கும் வலைகளிலிருந்து இருந்து நம்மால் தப்ப இயலாது" என்றது. பறவைகள் தகைவிலான் குருவியின் வார்த்தைகளை கிண்டலடித்தன. அதன் அறிவுரையை ஏளனம் செய்தன. எனவே தகைவிலான் குருவியானது மக்கள் இருந்த இடத்திற்கு சென்றது. தன்னுடைய கூட்டை மக்களின் வீடுகளின் கூரைகளுக்கு கீழ் மட்டுமே அமைத்தது. அதே நேரத்தில் தகைவிலான் குருவியின் எச்சரிக்கைக்கு செவி மடுக்க மறுத்த பிற பறவைகள் தற்போது வலைகள் மற்றும் கண்ணிகளில் அடிக்கடி சிக்கின.


நீதி: தீயவற்றை விதையிலேயே அழி அல்லது அது வளர்ந்து உன்னுடைய வீழ்ச்சிக்கு வழி வகுக்கும்.