ஈசாப் நீதிக் கதைகள்/தீய மதிநுட்பம்

ஒரு தீயவன் தெல்பி என்ற இடத்தில் இருக்கும் ஆரக்கிள் கடவுளிடம் தான் கேட்கும் ஒரு கேள்வி மூலம் தவறான பதிலை வரவழைத்து கடவுள் நம்பத் தகுந்தது அல்ல என்று நிரூபிப்பேன் என்று பந்தயம் கட்டினான். தன்னுடைய கையில் ஒரு சிறிய பறவையை வைத்துக் கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட நாளில் கோயிலுக்கு சென்றான். அப்பறவையை தனது மேலங்கி இடுக்கில் மறைத்து வைத்திருந்தான். தன்னுடைய கையில் இருப்பது உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து விட்டதா என்று கேட்க முடிவெடுத்தான். ஆரக்கிள் கடவுள் "இறந்து விட்டது" என்று கூறினால், அந்த பறவையை உயிருடன் காட்டுவது எனவும், அந்த பறவை "உயிருடன் இருக்கிறது" என்று ஆரக்கிள் கடவுள் பதில் அளித்தால் பறவையை கொன்று அது இறந்து விட்டது என்று காட்டுவது என முடிவெடுத்தான். ஆனால் ஆரக்கிள் அளித்த பதில் யாதெனில் "வழிப்போக்கனே, உன்னுடைய கையில் இருக்கும் பொருளானது உயிருடனோ அல்லது இறந்தோ இருப்பது என்பது முழுவதுமாக உன்னுடைய மன நிலையை சார்ந்துள்ளது" என்று பதிலளித்தது.


நீதி: கடவுள்களை ஏமாற்ற முடியாது.