ஈசாப் நீதிக் கதைகள்/சேவலும் இரத்தினக் கல்லும்

சேவல் ஒன்று குப்பையைக் கிளறி அதற்கான உணவைத் தேடிக் கொண்டிருந்தது. அப்போது அதற்கு ஒரு விலை மதிப்பற்ற இரத்தினக்கல் கிடைத்தது. அதனைப் பார்த்துக்கொண்டிருந்த குஞ்சு ஒன்று ஆவலுடன் சேவலின் அருகே வந்து அந்தக் கல்லை திருப்பித் திருப்பிப் போட்டது. அதைக் கண்ட சேவல் வருத்தமுடன் " இது எனக்குக் கிடைத்து என்ன பயன்? ஒரு இரத்தின வியாபாரியின் கையில் இது அகப்பட்டிருந்தால் அவனுக்கு இதன் மதிப்பு தெரியும். எனக்கோ இத விட இந்த குப்பையில் ஒரு தாணியம் கிடைத்திருந்தால் அதுவே விலை மதிப்பில்லத பொருளாக இருக்கும்" இன்று கூறியது.


[ஒருவருக்கு பயன்படும் பொருளே அவர்களுக்குச் சிறந்ததாகும்]