ஈசாப் நீதிக் கதைகள்/சூனியக்காரி

ஒரு நேரத்தில் கடவுளின் கோபத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக மந்திர சடங்குகளை தன்னால் செய்ய இயலும் என ஒரு சூனியக்காரி கூறி வந்தாள். இவ்வாறாக அவள் புரிந்த சடங்குகளால் பெருமளவு செல்வம் ஈட்டினாள். சிலர் அவள் புனிதத் தன்மையைக் கெடுப்பதாக குற்றம் சாட்டினர். அவள் கைது செய்யப்பட்டு அவளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அவளை அழைத்துச் சென்ற போது ஒருவன் அவளைக் கண்டு "கடவுளின் கோபத்தில் இருந்து காப்பாற்றுவதாக நீ கூறினாய், ஆனால் மனிதனின் கோபத்தில் இருந்து கூட உன்னால் தற்போது தப்ப இயலவில்லையே" என்றான்.


நீதி: தங்களைக் கூட காப்பாற்றிக் கொள்ள இயலாதவர்கள், மற்றவர்களைக் காப்பாற்றுவதாகப் பொய் கூறுகின்றனர்.