ஈசாப் நீதிக் கதைகள்/கொலைகாரன்

ஒரு கொலையைச் செய்த ஒரு மனிதன் அவனால் கொல்லப்பட்டவனின் பெற்றோர்களால் துரத்தப்பட்டான். அக்கொலைகாரன் நைல் ஆற்றின் விளிம்புக்கு வந்தான். அங்கு நேருக்கு நேராக ஓர் ஓநாயைக் கண்டான். மிகுந்த அச்சமடைந்த அவன் நீருக்கு அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறினான். அங்கு ஒளிந்து கொண்டான். ஆனால் அங்கு அவன் ஒரு மிகப் பெரிய பாம்பை கண்டான். அது அவனை நோக்கி ஊர்ந்து வந்தது. எனவே அவன் ஆற்றில் குதித்தான். ஆனால் ஆற்றில் ஒரு முதலை அவனை உண்டது.


நீதி: கொலைகாரர்களுக்கு ஒளிவதற்கு இடம் கிடையாது.