ஈசாப் நீதிக் கதைகள்/குள்ளநரியும், முட்புதரும்

ஒரு குள்ளநரி ஒரு தடுப்பு வேலியில் ஏறும் போது கால் இடறி தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக ஒரு முட்புதரில் காலை வைத்தது. தனது உள்ளங்காலில் முட்கள் குத்தி காயமடைந்தது. அதனுடைய உதவியை தேடி வந்த தன்னை, தடுப்பு வேலி நடத்தியதைக் காட்டிலும் மோசமாக நடத்தியதாக முட்புதர் மீது குள்ளநரி குற்றம் சாட்டியது. அதை வழிமறித்த முட்புதர் "மற்றவர்களை தைக்கும் என் மீது நீ கால் வைத்தது என்பது உன் புத்தி மாறியதால் இருக்கலாம்" என்றது.


நீதி: சில நேரங்களில் நீங்கள் உங்கள் எதிரிகளிடம் கூட உதவி கேட்கும் நிலை வரலாம்.