ஈசாப் நீதிக் கதைகள்/குள்ளநரியும், மரவெட்டியும்

ஒரு குள்ளநரி வேட்டையாடுபவர்களால் துரத்தப்பட்டது. நீண்ட தூரம் ஓடி கலைத்தது. ஒரு காட்டுப் பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்த ஒரு மரவெட்டியைக் கண்டது. தான் ஒளிவதற்கு ஓர் இடம் வழங்குமாறு அவனிடம் மன்றாடியது. அருகிலிருந்த தன்னுடைய கொட்டகையில் குள்ளநரி ஒளிந்து கொள்ளலாம் என்று அவன் கூறினான். சீக்கிரமே வேட்டையாடுபவர்கள் வந்தனர். "இந்த பக்கம் ஒரு குள்ளநரி ஓடியதை கண்டாயா?" என்று கேட்டனர். மரவெட்டி "இல்லை" என்றான். ஆனால் குள்ளநரி ஒளிந்திருந்த இடத்தை நோக்கி தனது கை விரலைக் காட்டினான். வேட்டையாடுபவர்கள் அந்த குறியீட்டை எடுத்துக் கொள்ளவில்லை. திரும்பிச் சென்றனர். அங்கு நடந்து கொண்டிருந்த அனைத்தையும் சுவற்றில் இருந்த ஒரு துளை வழியாக கண்ட குள்ளநரி வெளியில் வந்தது. எதுவும் கூறாமல் நடந்து செல்ல ஆரம்பித்தது. "இப்போது எப்படி இருக்கிறாய்? நீ செல்லும் முன்னர் நன்றி கூறும் பழக்கம் இல்லையா?" என்றான். "இருக்கிறது. உன்னுடைய நாக்கின் மூலம் வெளிப்படுத்திய வார்த்தையைப் போல் உன்னுடைய கை விரல்களை நீட்டுவதிலும் நேர்மையானவனாக இருந்திருந்தால் நான் நன்றி சொல்லாமல் இங்கு இருந்து சென்றிருக்க மாட்டேன்" என்றது.


நீதி: மனசாட்சி என்பது வாய் வார்த்தை போல செயல்களிலும் உண்மையாக இருப்பதாகும்.